Captain miller: கேப்டன் மில்லர் டப்பிங்கை துவங்கிய பிரியங்கா மோகன்.. ரிலீசுக்கு தயாராகும் படம்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
படம் தீபாவளிக்கே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படம்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் இந்தப் படம் டிசம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக தீபாவளியையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர்: படத்தில் தனுஷுடன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தனுஷின் அண்ணனாக நடித்துள்ள சிவராஜ்குமார் படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 3 கோடி பார்வைகளை கடந்து ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.
டப்பிங்கில் பிசியான பிரியங்கா மோகன்: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக பிரியங்கா மோகன் அதன் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டத்தையொட்டிய கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இதன் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்: வழக்கமாக ஒரு படத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே கால்ஷீட் தரும் வழக்கத்தை கடைப்பிடித்துவரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் டீசர், முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவற்றில் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷை பார்க்க முடிந்தது. இதையடுத்து படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் டி50 படம்: தற்போது தன்னுடைய இயக்கம் +நடிப்பில் உருவாகிவரும் டி50 படத்தின் சூட்டிங்கை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய டி51 படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தது பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். கோலிவுட்டில் துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்து டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











