விரைவில் படமாகும் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு?!

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது.

அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

ஆனால், அதனைப் பற்றிய விவரங்களை மனம் திறந்து கூறியிருக்கின்றார் பிரியங்கா சோப்ரா.

படத்திற்கு நான் தடை இல்லை:

படத்திற்கு நான் தடை இல்லை:

"என்னைப் பற்றி ஒரு சினிமா உருவாவதற்கு நான் தடை ஒன்றும் போடப்போவதில்லை. ஆனால் அது சரியான நேரத்தில் உருவாக்கப்பட வேண்டும்" என்கிறார்.

உலக அழகி பட்டம்:

உலக அழகி பட்டம்:

பிரியங்கா மாடலிங் துறையில் அடியெடுத்துவைத்து அழகுப்போட்டிகளில் பங்கேற்று உலக அழகி பட்டம் வென்றார். பின்பு இந்தி சினிமாவில் நுழைந்த அவர் இன்று கதாநாயகியாக உச்சத்தில் இருக்கிறார்.

நண்பர் உருவாக்கும் படம்:

நண்பர் உருவாக்கும் படம்:

அவர் மாடலிங் செய்த காலத்தில் இருந்தே அஸீம் மெர்ச்சன்ட் என்பவர் அவருக்கு நண்பராக இருக்கிறார். பிரியங்காவின் வாழ்க்கை ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த அவர்தான் பிரியங்கா பற்றிய படத்தை உருவாக்கப் போகிறாராம்.

தயாரிப்பாளர் அவதாரம்:

தயாரிப்பாளர் அவதாரம்:

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த "வான்டட்" படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த அஸீம் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

தலைகால் புரியவில்லை:

தலைகால் புரியவில்லை:

"என்னைப் பற்றி ஒரு படம் எடுக்குமளவு நான் பெரிய ஆளாகி விட்டேனா என்று நினைக்கும்போது எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. சீரியசாக சொல்ல வேண்டுமென்றால் என்னைப் பற்றி படம் உருவாக்குமளவு நான் பெரிய ஆளில்லை" என்று அடக்கமாகச் சொல்கிறார் பிரியங்கா.

40 வயசில் ஒகே:

40 வயசில் ஒகே:

"அந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்பதெல்லாம் உண்மையிலேயே எனக்குத் தெரியாது. நான் வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வேண்டுமானால் எனது 40 வயதில் என்னைப் பற்றி ஒரு படம் உருவாக்கலாம். காரணம் நான் அப்போது சாதிக்க நினைத்தவற்றைச் சாதித்திருப்பேன்" என்கிறார்.

சட்டப் போராட்டம்:

சட்டப் போராட்டம்:

பிரியங்கா பற்றி உருவாகும் படத்தில் அவரது மாடலிங் நாட்கள், அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் ஜாஜுவுடன் அவர் நடத்திய சட்டப் போராட்டம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.

மேரி கோமாக பிரியங்கா:

மேரி கோமாக பிரியங்கா:

தற்போது பிரியங்காவே ஒரு சுயசரிதைக் கதையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதாவது உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமாக அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

உடன் இருக்கும் மேரி கோம்:

உடன் இருக்கும் மேரி கோம்:

"மேரி கோமின் நிஜவாழ்க்கைக் கதையில் நான் நடிக்கிறேன். அதன் ஒவ்வொரு காட்சி படம்பிடிக்கப் படும்போதும் மேரி கோம் உடனிருந்து கவனிக்கிறார் குறிப்பிட்ட சூழல்களில் தனது உணர்வுகள் எப்படி இருந்தன என்று விளக்குகிறார். அது எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது" என்று கூறி முடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X