சிண்ட்ரெல்லாவாக நடிப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்… ராய் லட்சுமி நெகிழ்ச்சி !
சென்னை : சிண்ட்ரெல்லா என்ற பெயரில் ஆங்கிலத்தில் பல படங்கள் வந்துள்ளன. தமிழில் முதன்முறையாக உருவாகும் ஒரு திரைப்படம் தான் சிண்ட்ரெல்லா.
ராய் லட்சுமி இப்படத்தில் சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு துளசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

தேவதை கதை
சிண்ட்ரெல்லா என்ற அழகான தேவதைக்கு அனைவரும் வியந்த பார்க்கும் படி ஒரு வாழ்க்கை கிடைக்கிறது. அதை பார்த்து பொறாமை படும் உறவினர்கள், அவளை பழிவாங்க நினைப்பதும் தான் கதை. பேய் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும் உருவாகி உள்ள இந்த சிண்ட்ரெல்லா என்ன செய்யப் போகிறாள் என்பதே கதை.

பேய் படமா
அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு பேய் படமாக இப்படத்தை இயக்குனர் உருவாக்கி உள்ளார் வினோ வெங்கடேஷ். இவர் எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சிண்ட்ரெல்லா திரைப்படத்தை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில், பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் வில்லியாக நடித்துள்ளார்.

நான் செய்த பாக்கியம்
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளசி புகைப்படத்தை பதிவிட்டு, நான் ஒரு நடிகையாக பல படங்களில் வாழ்ந்து இருக்கிறேன்.துளசி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Recommended Video

முக்கியமான படம்
இப்படத்தில் நடிகை ராய் லட்சுமி சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகை என்ற பெயரை உடைக்கும் படமாக இப்படம் இருக்கும். ராய் லட்சுமிக்கு இது ஒரு முக்கியமான திரைப்படமாக இது இருக்கும். வழக்கமான திகில் படங்களிலிருந்து விலகி, ஒரு புதிய பாதையில் கதை பயணிக்கும் . தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











