வெப் சீரிஸில் ராய் லக்ஷ்மி.. போஸ்டரே தாறுமாறா இருக்கே.. ஏப்ரல்ல டெம்ப்ரேட்சர் ஏறப்போகுதாம்!

Recommended Video

Losliya Shocking Tweet | Kavin Losliya Break Up | Rai laxmi into Web

சென்னை: ராய் லக்ஷ்மியின் பாய்சன் 2 வெப்சீரிஸின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் வெளியான காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. வசூலையும் குவித்தது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் அவரது நடிப்பில் உருவாகி வரும் சிண்ட்ரெல்லா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

வைரல்

வைரல்

இந்நிலையில் நடிகை ராய் லக்ஷ்மி கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் தனது ஓய்வை கழித்து வந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் தனது ஓய்வை கழித்து வரும் ராய் லக்ஷ்மி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு கிக்கேற்றி வந்தார். அவரது போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலானது.

வெப்சீரிஸ்

வெப்சீரிஸ்

குறிப்பாக பிகினியில் அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் ராய் லக்ஷ்மி. அந்த வகையில் ராய் லக்ஷ்மி தற்போது தனது வெப் சீரிஸ் குறித்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆடையில்லாமல்

ஆடையில்லாமல்

ராய் லக்ஷ்மி பாய்சன் சீசன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அப்தாப் ஷிவ்தாசனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராய் லக்ஷ்மி. இதன் முதல் முறையாக வெப் தொடரில் அறிமுகமாகிறார் ராய் லக்ஷ்மி. இதன் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ஆடையில்லாமல் இருவரும் நெருக்கமாக இருப்பதாக உள்ளது.

டெம்ப்ரேட்சர்

டெம்ப்ரேட்சர்

வெப் உலகில் எனது முதல் முயற்சி.. என் அடுத்த படைப்பில் உங்களை நீங்களே இணைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றியின் இரண்டாவது சீசனுடன் அறிமுகம் ஆகிறேன். இந்த காதல் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாக கொண்ட இந்த வெப் சீரிஸால் இந்த ஏப்ரலில் டெம்ப்ரேட்சர் அதிகரிக்கும் என்றும் பதிவிட்டிருக்கிறார் ராய் லக்ஷ்மி.

எகிறும் எதிர்பார்ப்பு

ராதிகா ஆப்தே, காஜல் அகர்வால், கியாரா அத்வானி, சமந்தா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளை தொடர்ந்து ராய் லக்ஷ்மியும் வெப் சீரிஸில் இணைந்துள்ளார். இதன் போஸ்டரே இருவரும் ஆடையில்லாமல் இருட்டில் நெருக்கமாக இருப்பது போன்று இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியிருக்கிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X