அந்த நடனத்தை கற்கும் ராய் லக்ஷ்மி.. பிகினி உடையில் இன்ஸ்டாவில் அப்படியொரு போஸ்.. வேற லெவல் வைரல்!
சென்னை: கிளப்களில் பெண்கள் நடனமாடும் 'போல்' நடனத்தை ஆர்வமாக கற்று வருகிறார் நடிகை ராய் லக்ஷ்மி.
குண்டக்க மண்டக்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான லக்ஷ்மி ராய், தனது பெயரை ராய் லக்ஷ்மி என பின்னர் மாற்றிக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் கவர்ச்சி கன்னியாக மிரட்டி வருகிறார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி
பாலிவுட்டில் ஜூலி 2 படத்தில் நடித்த ராய் லக்ஷ்மி, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கட்டுங்கடங்காத ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடித்து வரும் ராய் லக்ஷ்மிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

அரை நிர்வாணமாக
பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ராய் லக்ஷ்மி, சமீபத்தில் ஜீ5 தளத்தில் வெளியான பாய்ஸன் 2 வெப்சீரிஸில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த வெப்சீரிஸின் போஸ்டர்களில் சக நடிகருடன் அரை நிர்வாண கோலத்தில் ராய் லக்ஷ்மி கொடுத்த ஹாட்டான போஸ் இணையத்தின் சூட்டை அதிகரித்தது.

ஹோம்லி லுக்கில்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோக்களை மட்டுமின்றி பல க்யூட்டான ஹோம்லி லுக் போட்டோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை ராய் லக்ஷ்மி. அந்த போட்டோக்களை பார்த்தவர்கள், அட இது நம்ம ராய் லக்ஷ்மி தானா? இல்லை வேற யாராவது புது மாடலா என்னும் அளவுக்கு அசந்து போனதும் குறிப்பிடத்தக்கது.

போல் டான்ஸ்
பொதுவாக கிளப்களில் மாடல் அழகிகள் ஒரு கம்பியை சுற்றி Pole dance ஆடுவார்கள். இந்நிலையில் தற்போது தனக்கு அது மிகவும் பிடித்து இருப்பதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும், வெறித்தனமாக அதை கற்று வருவதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ள போஸ்ட் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

வீடியோ வேணும்
ராய் லக்ஷ்மியின் இந்த போஸ்ட்டை பார்த்த பல பிரபலங்களும் ரசிகர்களும் லைக் போட்டு வருகின்றனர். மேலும், சீக்கிரமே பக்காவாக போல் நடனம் ஆடும் வீடியோவை வெளியிடுங்க ராய் லக்ஷ்மி என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. உடலை பேலன்ஸ் செய்யும் இந்த நடனத்தை ஏகப்பட்ட ஹாலிவுட் நடிகைகளும் கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு லிஸ்ட்டே இருக்கு
புது படங்கள் ஏதும் இல்லாததால் தான் இப்படி புது வித்தையை கற்றுக் கொள்கிறார் ராய் லக்ஷ்மி என சிலர் கிண்டல் செய்தாலும், ராய் லக்ஷ்மியின் நடிப்பில் ரிலீசுக்கு வர ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு என்பது தான் உண்மை. சிண்ட்ரெல்ல, ஜான்சி ஐபிஎஸ், ராணி ரணம்மா, டிப்ஸி, யோதா 2 என அடுத்து சில ஆண்டுகளுக்கு மேடம் பிசி தான்.


Click it and Unblock the Notifications











