'இதுக்கு மேலயும் ஒல்லி ஆகாதீங்க, கவலையா இருக்கு...' கிளாமர் ஹீரோயினுக்கு கோரிக்கை வைத்த ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ராய் லட்சுமி, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி.

பின், தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார்.

பாய்சன் 2

பாய்சன் 2

இப்போது தமிழில் சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் அப்தாப் ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர், தமிழில் பாஸ்கர் த ராஸ்கல் என்ற படத்தில் நடித்தவர்.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இந்த தொடர் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகிறார். அந்த போட்டோகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

இதுக்கு மேலயும்

இதுக்கு மேலயும்

இப்போதும் புதிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ராய் லட்சுமி வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், கண்டபடி கமென்ட் போட்டு வருகின்றனர். ஒரு ரசிகர், 'இதுக்கு மேலயும் ஒல்லி ஆகாதீங்க... எனக்கு கவலையா இருக்கு... கொஞ்சம் வெயிட் போடுங்களேன்' என்று கோரிக்கை வைத்துள்ளார். 'உங்களுக்காகவே பாய்சனை 2 வை (வெப்சீரிஸ்) எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ரியல் அழகு

ரியல் அழகு

'உங்க அழகுக்கு முன்னால எதுவுமே இல்லை... ரியல் அழகுன்னு சொல்வாங்களே அது நீங்கதான்' என்று ஒரு ரசிகர் கூற, மற்றொருவர், பால்கோவா என்றும் பேபி டால் என்றும் வர்ணித்துள்ளனர். கொரோனா பரவுது... பார்த்து பத்திரமா இருந்துக்கோங்க' என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகர், நீங்க நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கீங்க என்று தெரிவித்துள்ளார். ராய் லட்சுமியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X