இது என்ன பிகினியா.. இல்ல டாப்பா.. குழப்பத்தை ஏற்படுத்திய ராய் லட்சுமி!

சென்னை: ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. முன்னதாக விக்ராந்த்துடன் இவர் தன்னுடைய அறிமுகத்தை மேற்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் இவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Actress Raai Laxmis new photoshoot pictures makes fans more thrilling

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

நடிகை ராய் லட்சுமியின் புதிய புகைப்படங்கள்: தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்த படம் என்றால் அது ஜெயம் ரவியுடன் இவர் நடித்திருந்த தாம் தூம் படம்தான். தொடர்ந்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தார். இந்தப் படத்தில் இவரது அதீதமான கவர்ச்சி ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

Actress Raai Laxmis new photoshoot pictures makes fans more thrilling

தமிழில் கற்க கசடற என்ற படத்தின்மூலம் அறிமுகமான ராய் லட்சுமி, தொடர்ந்து தாம் தூம், குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, சிண்ட்ரெல்லா, மங்காத்தா, காஞ்சனா என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களளை கவர்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்திய ராய் லட்சுமி அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இவரது என்ட்ரி படமான ஜூலி 2 கலவையான விமர்சனங்களையே பெற்றது.

சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் வாடிவாசல் என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ராய் லட்சுமி, அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்பபடங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

Actress Raai Laxmis new photoshoot pictures makes fans more thrilling

இவரது புகைப்படங்களால் ஏராளமான ரசிகர்கள் கவரப்பட்டுள்ள நிலையில், தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துவரும் ராய் லட்சுமி தற்போது தான் அணிந்துள்ள டாப் மூலம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த டாப் ஒருபக்கம் பார்க்கும் போது பிகினி போல காணப்படுகிறது. மறுபக்கம் டாப்ஸ் போலவும் உள்ளது. காரணம் இந்த டாப்சிற்கு கீழே ஃபுல் பேண்ட் அணிந்துள்ளார் ராய் லட்சுமி.

Actress Raai Laxmis new photoshoot pictures makes fans more thrilling

எளிமையாக இருப்பது சுவாரஸ்யமானது என்று இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ராய் லட்சுமி. தொடர்ந்து பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில் இவர் அடுத்தடுத்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகிறார். அதிகமான ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் ராய் லட்சுமி. ஆனாலும் தன்னுடைய பிட்னஸ், அழகு, கவர்ச்சி குறையாமல் பார்த்து வருகிறார். ஏராளமான ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X