Raashi khanna: களைகட்டும் தீபாவளி.. புத்தாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன ராஷி கண்ணா!
சென்னை: நடிகை ராஷி கன்னா தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

க்யூட் நடிகை: அழகான நடிகையான ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார்.
ஃபார்ஸி: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில், பணம் மனிதனை எந்தளவுக்கு மோசடிக்காரர்களாக மாற்றுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
கதைதான் முக்கியம்: நடிகை ராசி கன்னா தமிழில் கார்த்திக்குடன் இணைந்த சர்தார் படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தி தொலைக்காட்சியில் அதிகம் தென்படும் ராஷி கன்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நடிகைக்கு அழகு முக்கியம்தான், ஆனாலும் அழகை மட்டுமே நம்பி இருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது என்றார்.
ஹாப்பி தீபாவளி: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னா, தீபாவளிக்கு வண்ண விளக்கு மத்தியில், கையில் விளக்கை வைத்துக்கொண்டு தனது ரசிகர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரின் அழகு பல மடங்கு அதிகரித்தது போல சும்மா அட்டகாசமாக இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் தீபாவளி செலப்ரேஷன் ஸ்டார் என கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த போட்டோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











