Raashi Khanna : படுமோசமான உடையில் விருது வழங்கும் விழாவிற்கு வந்த ராஷி கன்னா!
சென்னை : சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடிகை ராஷி கன்னா படுமோசமான உடையில் கலந்து கொண்டார்.
க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

ஹிட் படங்களில் :
அழகான நடிகையான ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார்.
ஃபார்ஸி :
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில், பணம் மனிதனை எந்தளவுக்கு மோசடிக்காரர்களாக மாற்றுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது.
கதைதான் முக்கியம் :
நடிகை ராசி கன்னா தமிழில் கார்த்திக்குடன் இணைந்த சர்தார் படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தி தொலைக்காட்சியில் அதிகம் தென்படும் ராஷி கன்னா, பிரபல தனியார் ஊடக விருது வழங்கும் விழாவில் சீப் கெஸ்டாக கலந்து கொண்டார்.அதில் பேசிய அவர், நடிகைக்கு அழகு முக்கியம்தான். ஆனாலும் அழகை மட்டுமே நம்பி இருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவும், பட வாய்ப்புகளை அதிகரிக்கவும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்றார்.

படு மோசமான உடையில் :
இந்நிலையில், அபுதாபியில் யாஸ் தீவில் கோலாகலமாக நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது (IIFA Awards 2023) வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ராஷி கன்னா உள்ளாடை அணியாமல், படு மோசமான உடையில் விழாவில் கலந்து கொண்டார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷி கன்னா, பட வாய்ப்பை அதிகரிக்க கவர்ச்சியில் குறைவைக்காமல் தாராளம் காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











