நுகர்ந்து பார்த்தாலே ஏறிடும்.. ரச்சிதாவுக்கு வந்திருக்கும் வித்தியாசமான நோய்.. இப்படியெல்லாமா இருக்கு

சென்னை:Rachitha Mahalakshmi (ரச்சிதா மகாலட்சுமி) நடிகை ரச்சிதாவுக்கு வந்திருக்கும் ஹார்மோன் நோயை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

Actress Rachitha Mahalakshmi Affected with Rare Hormone Disease

தமிழில் அறிமுகம்: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

பிரிவோம் சந்திப்போம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. பல மாதங்கள் பிரிந்திருந்த அவர்கள் தற்போது விவாகரத்தையும் பெற்றுவிட்டார்கள்.

Actress Rachitha Mahalakshmi Affected with Rare Hormone Disease

பிக்பஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாடிய அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த அவர் தற்போது சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நோய்: இந்நிலையில் ரச்சிதாவுக்கு அரிய வகை நோய் வந்திருக்கிறதாம். அதாவது பொதுவாக ஒருவருக்கு அதிகம் சாப்பிட்டால்தான் உடல் எடை கூடும். ஆனால் ரச்சிதாவோ உணவை நுகர்ந்து பார்த்தாலே அந்த வாசனை மூலம் உடல் எடை கூடுகிறாராம். சமீபத்தில் மருத்துவரிடம் சென்றபோது இந்த விஷயம் அவருக்கு தெரியவந்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X