ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்..கணவர் மீது நடிகை ரச்சிதா காவல் நிலையத்தில் புகார்!

சென்னை: கணவர் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக நடிகை ரச்சித்தா மகாலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.

actress rachitha mahalakshmi complaints about her husband Dinesh

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவருக்கும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில்: இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை வீட்டில் இருந்தார்.

மிரட்டுகிறார்: இந்நிலையில், நடிகை ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார். மேலும், போன் செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணைக்கு அழைத்தனர்.

போலீஸ் விசாரணை: காவல் நிலையம் வந்த நடிகர் தினேஷ் நாங்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்து இருக்கிறோம். சட்டப்படி நாங்கள் இன்னும் பிரியவில்லை, வேண்டுமானால், ரச்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என்றார். இந்த புகார் தொடர்பாக ரச்சிதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X