Fire பாடல் மொத்தமும் ஆபாசம்.. பாலா, ரச்சித்தா மேல எந்த இடத்தில் கை வைச்சி இருக்காரு.. ச்சீ என்ன இது?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த ரச்சிதா உப்பு கருவாடு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ரச்சிதா பஃயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில் ரச்சிதா மகாலட்சுமி படுகிளாமராக நடித்துள்ளார். இந்த பாடலை பார்த்த இணையவாசிகள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
ரச்சிதா மகாலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்து கொண்டு பல மக்களின் பாராட்டையும் பெற்றார். தற்போது இவர்,ஜே எஸ் கே சதீஷ் என்பவரின் இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி ஃபயர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சியாக நடித்துள்ளார். அவர் வெறும் சட்டை அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டானது. அதுமட்டுமில்லாமல், இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் அவரது இணைய பக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்தநாள் அன்று அந்த போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பதிலடி கொடுத்த இயக்குநர் இயக்குனரின் இந்த பதிவினைப் பார்த்த இணையவாசிகள், சீரியல் மற்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப குத்து விளக்காக இருந்து வந்த ரச்சிதாவா, பஃயர் படத்தில் இப்படி கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்று அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ், நீங்க நடித்ததை தான் உங்க பிறந்தநாள் அன்று பதிவிட்டேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடலை, இந்த படத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கியது என அனைத்து ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என்றார்.
விவகாரமான பாடல்: இப்படி ஃபயர் படத்தின் விவகாரம் சென்று கொண்டு இருக்க அந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். அந்த படத்தில் இருந்து மெதுமெதுவாய் என்கிற பாடல் வெளியாகி உள்ளது. அந்த பாடலில் ரச்சித்தா வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு இருக்க, பாலா , ரச்சித்தாவை அந்த இடத்தில் தொடுகிறார். அதுமட்டுமில்லாமல் பாடல் மொத்தமும் ஓவர் கவர்ச்சி தான். இது அந்த பாடலில் அப்பட்டமாக தெரிய பலரும் இந்த பாடலைப் பார்த்து, வாயடைத்து போய், ரச்சித்தாவா இப்படி மோசமாக நடித்துள்ளார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











