ஆபாசத்தை ஆதரிக்காதீர்கள்.. தள்ளிவிட்டு போங்க.. அதிரடியான பதிலளித்த ரச்சிதா!
சென்னை: இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கிய எக்ஸ்ட்ரீம் திரைப்படத்தில் பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா,ராஜ்குமார், சிவம் உட்பட பலர் நடித்துள்ளனர். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் தயாரித்துள்ளனர். பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் செய்யும் சில விஷயத்தில் பாதிக்கப்படுவதும் ஒரு பெண் குறித்தும், அதற்குத் தீர்வு காண்பதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து உருவான படம் தான் எக்ஸ்ட்ரீம்.
இப்படம் கடந்த 3ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இப்படத்தை பார்க்க நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது தாயாருடன் வந்திருந்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர் ஒருவர், சிலர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடை போட்டு ஆபாச வீடியோக்கள் வெளியிடுகிறார்களே அது பற்றி உங்க கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற ஆபாசமான போட்டோக்களுக்கு லைக் போடாதீர்கள் என்றார்.

லைக்குக்கு ஆசைப்பட்டு: பொதுவா பெண்களுக்கு என்று சில விஷயம் இருக்கு, அந்த விஷயங்களை பெண்கள் கடைப்பிடித்து உடைகளை அணிய வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் ஆபாசமான உடையில இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் போஸ்ட் பண்றாங்க. இதனால அவங்க பாதிக்கிறது இல்ல, அந்த ஆபாவத்தை பார்த்த கண்ணோட்டத்திலேயே மற்ற பெண்களையும் ஆண்கள் பார்ப்பதால், சாதாண பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
மாறவேண்டும்: இந்த நிலைமாற வேண்டும் என்றால், இணையத்தில் வரும் இதுபோன்ற ஆபாசமான புகைப்படத்தை பார்க்காமல் தவிர்க்க வேண்டும், லைக்குகளை போடாமல் அவர்களை எங்ரேஜ் செய்யாமல், அப்படியே தள்ளி விட்டுட்டு போனோம் என்றால், நாளடைவில் என்னடா எந்த லைக்கும் வரவில்லை என்று ஒரு கட்டத்தில் அவர்களே ஆபாச போட்டோக்களை போடுவதை நிறுத்திவிடுவார்கள் என்றார். மேலும், இதுபோன்ற கவர்ச்சியான போட்டோவால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
வருத்தம் அளிக்கிறது: இதையடுத்து அண்ணாபல்கலைக்கழக மாணவி சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரச்சித்தா, அந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், விழிப்புணர்வு வரவில்லை. மேலும் மேலும் குற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று ரச்சித்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











