Rachitha: நான் எல்லாத்தையும் உள்ளுக்குள்ளயே வச்சிருக்கிறதுக்கு காரணம்.. ரச்சிதா பதிவு!

சென்னை: விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ரச்சிதா.

இந்த ஜோடி மீடியாவில் மிகவும் சிறப்பான ஜோடியாக இருந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Actress Rachitha mahalakshmi says that she have reasons for all

வாழ்க்கையில் பாடங்களை கற்று வருவதாக ரச்சிதா பதிவு: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணமும் செய்துக் கொண்டனர். திரையுலகின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாகவே கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தனர். மாமா மாமா என்று தினேஷை ரச்சிதா அழைத்தது அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டபோது, வெளியில் இருந்து தினேஷ் ஆதரவு தெரிவித்தார். மேலும் ராபர்ட் மாஸ்டருடன் ரச்சிதாவை இணைத்து பேசப்பட்டபோது கோபப்பட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தினேஷும் தான் ரச்சிதாவுடன் இணைந்து வாழவே விரும்புவதாக தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினேஷ் மீது ரச்சிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தன்னை தினேஷ் ஆபாசமாக பேசி, மெசேஜ் அனுப்பி வருவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் சிறப்பாக உள்ளதாகவும் எந்த விஷயமும் தன்னை காயப்படுத்தவில்லை என்றும் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் ரச்சிதா, தினேஷுடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரச்சிதாவின் போலீஸ் புகார், அதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவர்கள் இருவரும் இனிமேல் இணைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரச்சிதா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் தான் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது என்றும் தனக்கு நேர்ந்த விஷயங்களில் இருந்து பாடங்கள் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது. அவர் தினேஷுடனான உறவு குறித்து அதிகமாக வெளிப்படுத்தாமல் உள்ள நிலையில், அதை குறிப்பிட்டே இந்த பதிவினை தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ரச்சிதா, சில தினங்களுக்கு முன்பு தனியாக பயணம் செய்ய வேண்டும் என்பதாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X