Rachitha mahalakshmi: ஸீ த்ரூ புடவையில் வெட்கத்தை பரிசளித்த ரச்சிதா.. இனிமே கவர்ச்சி தானாம்!

சென்னை: தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி தன்னுடைய இயல்பான மற்றும் அழகான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் லீட் கேரகடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் இவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த சீரியலில் நடித்தபோது தன்னுடன் இணைந்து நடித்திருந்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா பங்கேற்றபோது வெளியில் இருந்து தினேஷ் ஆதரவு தெரிவித்தார்.

கடந்த பிக்பாஸ் சீசனில் தினேஷ் பங்கேற்றிருந்தார். இதேபோன்ற ஆதரவை அவர் தினேஷிற்கு அளிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்தவிதமான ஆதரவையும் தெரிவிக்காதது மட்டுமில்லாமல், தன்னுடைய பிரிவு குறித்த முடிவில் அவர் தீவிரமாக இருந்ததையும் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தினார். தற்போது கன்னட படத்தில் நடித்து முடித்துள்ள ரச்சிதா கவர்ச்சியான உடைகளில் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 15 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Rachitha mahalakshmi shared new photoshoot picutre in see through saree

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். பிரிவோம் சந்திப்போம் சீரியல் இவருக்கு மிகப்பெரிய அளவில் பாலோயர்களை கொடுத்தது. தொடர்ந்து இவரது சரவணன் மீனாட்சி தொடரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டத்தை உண்டு செய்தது. இந்த சீரியலில் இவரது இயல்பான நடிப்பு அந்த சீரியலின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ரச்சிதா. இவர்களது திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகள் சிறப்பாகவே சென்றது.

தினேஷ் -ரச்சிதா திருமண முறிவு: எங்க சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் 8 ஆண்டுகளை கடந்த இவர்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதாவிற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தார் தினேஷ். இதையடுத்து அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ரச்சிதா மகாலட்சுமி, தினேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் வாழ்க்கையில் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது.

Actress Rachitha mahalakshmi shared new photoshoot picutre in see through saree

கன்னட படத்தில் அறிமுகம்: முன்னதாக கன்னட சீரியல் மூலமாகவே ரச்சிதா மகாலட்சுமி என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது கன்னட படத்தில் நடித்துள்ளார். குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்துவந்த ரச்சிதா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த பதிவுகளை செய்துவரும் இவரை 15 லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிகப்படியான கவர்ச்சியான உடைகளில் அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி.

புதிய போட்டோஷுட்: புடவையிலும் கவர்ச்சி தூக்கலாகவே தன்னுடைய போட்டோஷூட்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். தற்போது வெள்ளை நிற ஸீ த்ரூ புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. இந்த உடையுடன் மேக்கப் வீடியோவையும் ரச்சிதா வெளியிட்டுள்ளார். மேலும் வித்தியாசமான போஸ்களிலும் அவர் போட்டோஷுட்டை எடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X