கைதான ஸ்ரீகாந்த்.. நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் படத்துக்கு வந்த சிக்கல்.. என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கொக்கைன் எனும் போதைப்பொருளை பயன்படுத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் கைது செய்யப்பட்டபோது அவரிடத்தில் இரண்டு கிராம் அளவுக்கு கொக்கைன் இருந்ததாகும் கூறப்படுகிறது. இவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் தற்போது நடித்து வரும் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் நடிகராக வலம் வருகிறார். இவர் நேற்று முன் தினம் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கொக்கைன் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். முதலில் அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவர் கொக்கன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை வைத்து படம் தயாரித்த பிரசாத் என்பவர் தான் தனக்கு கொக்கைனை அறிமுகம் செய்து வைத்ததாகவும், தனது சம்பளபாக்கிக்கு பதிலாக கொக்கைன் கொடுத்ததாகவும், அதன் பின்னர் தான் அதற்கு மிகவும் அடிமையாகி விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் பல திரைப் பிரபலங்கள், அரசியல் புள்ளிகள் என பலரும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு சினிமா உலகில் இருந்து பலரும் சிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Actress Rachitha Mahalakshmi Worried About Actor Srikanth Arrest
Photo Credit:

சிறையில் ஸ்ரீகாந்த்: இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதால் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மிகவும் கவலையில் உள்ளார். அதாவது ரச்சிதா மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிகராக நடித்து வந்தார். தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு விட்டது. இது மட்டுமல்லாமல் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகவது சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்த் உடன் படம்: இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் நடிகை ரச்சிதா மகாலட்சுமி உடன் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதா? அல்லது பாதியில் உள்ளதா என்ற கேள்வி பலரையும் ஆட்கொண்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துவிட்டால் கூட டப்பிங்கில் வேறு யாரையாவது வைத்து மேட்சிங் செய்து கொள்ள முடியும். ஒருவேளை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்றால் தயாரிப்பாளர்தான் முதல் நபராக பெரிய பாதிப்பினை எதிர் கொள்வார். அதாவது படத்தின் இதுவரை தயாரித்த செலவு, நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்டவை என அனைத்தும் நஷ்டம் தான்.

ரச்சிதாவின் கவலை: மேலும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் கவலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது. தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இப்போதுதான் சில ஆண்டுகள் ஆகிறது. தன்னுடன் நடித்த ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த படம் வெளியாகுமா என்ற கவலையில் இருக்கிறாராம். இது மட்டுமல்லாமல், ஒருவேளை நடிகரை மாற்றினால், இவரது கால் ஷீட்டில் பிரச்னை வருமோ, வேறு படத்தில் கமிட் ஆக முடியாமல் போய்விடுமோ என்ற கவலையிலும் இருக்கிறார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X