பணத்தை திருப்பி கொடுங்க.. அம்பிகா, ராதா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த தடை போட்ட சங்கம்!
சென்னை: நடிகை ராதா மற்றும் அம்பிகாவின் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா.

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை அம்பிகா, ராதா: அதே 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ராதாவின் சகோதரியான நடிகை அம்பிகாவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதோடு ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போதும் அம்பிகா சீரியல்களில் நடித்து வருகிறார்.
நடிகை ராதா: நடிகை ராதா திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால், விஜய் டிவியில் சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவருடைய இரண்டு மகள்களும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு பின் அப்பாவின் பிஸ்னசை கவனித்து வந்தனர். அதில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு அண்மையில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது.
ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோ: இந்நிலையில், நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோருக்குச் சொந்தமான ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோவில் எந்தவிதமான படப்பிடிப்புகளையும் நடத்தத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத் என்பவர் அம்பிகா, ராதாவின் தம்பி அர்ஜுனிடம் 25 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். அதில் 19 லட்சத்தை அவர் திரும்பி கொடுத்துவிட்ட நிலையில், இன்னும் 6 லட்ச ரூபாயை அவர் திருப்பி கொடுக்கவில்லை.
தற்காலிக தடை: இது குறித்து காட்ரகட்ட பிரசாத் பல முறை கேட்டபோதும் அர்ஜூன் பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் சுற்றி இருவருக்கும் இடையே தகராறாக மாறியதை அடுத்து, காட்ரகட்ட பிரசாத் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சங்கத்தினரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஏஆர்எஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்புகளை நடத்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











