இனியும் என்னால பொறுத்துக்க முடியாது.. பெருமூச்சு விட்டு புலம்பும் ராதா மகள்!

சென்னை : நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

கோ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தும் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார்.

இதனால் தந்தையின் பிஸ்னசை கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராதா. இவர், தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிக் டிக் டிக், காதல் ஓவியம், எங்கேயோ கேட்ட குரல், முதல் மரியாதை உழவன் மகன், என் உயிர் கண்ணம்மா என பலத்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மும்பையில் செட்டில்

மும்பையில் செட்டில்

இவர் ராஜாசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்டார். இவருக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்த ராதா. விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.

கோ படத்தில்

கோ படத்தில்

இவரது மகள் கார்த்திகா நாயர், கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவும் இப்படம் அமைந்து இருந்தது.

வெளியாக வில்லை

வெளியாக வில்லை

இந்த திரைப்படத்தை அடுத்து அன்னக்கொடி. புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் , இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் பெற்றுத்தரவில்லை. மேலும், அருண் விஜயுடன் இவர் நடித்த வா டீல் தற்போது வரை வெளியாகாமல் பிரச்சினையில் உள்ளது.

சினிமாவை விட்டு விலக முடிவு

சினிமாவை விட்டு விலக முடிவு

பட வாய்ப்புகள் எதுவும் வராததால் மன விரக்தியில் இருக்கிறார் கார்த்திகா நாயர். இதனால் ஒரே அடியாக திரைப்படத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தை நடத்தி வரும் ஓட்டலை கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Read more about: radha ராதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X