மோசடிக்காரர் பைசூலுக்கு போலீஸ் அதிகாரியே உதவுகிறார்!- நடிகை ராதா புகார்
சென்னை: தன்னை மோசடி செய்த பைசூல் கைதாகாமல் இருக்க போலீஸ் அதிகாரி ஒருவரே உடந்தையாக இருப்பதாக நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா, திருவல்லிக்கேணியை சேர்ந்த தயாரிப்பாளர் பைசூல் தன்னை மோசடி செய்து உடல் சுகம் அனுபவித்துவிட்டு, ரூ 50 லட்சத்தையும் அபகரித்துக் கொண்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறினார்.

மோசடி, கொலை மிரட்டல் வழக்கு
இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பைசூல் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜரான ராதா பைசூலுக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பைசூலின் முன்ஜாமீன் மனு தள்ளளுபடியானது. அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக பைசூல் தலைமறைவானார்.

தனிப்படை
அவரை பிடிப்பதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உதவி கமிஷனர் ஜெய்சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டுக்கு செல்லாமல் பைசூல் எங்கேயோ, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அவரது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் சென்னையில் பைசூல் பதுங்கி இருப்பதை உறுதி செய்துள்ள போலீசார் அவர் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார்கள். இதற்காக பைசூலுக்கு நெருக்கமானவர்கள் யார் - யார்? என்ற பட்டியலை தயாரித்துள்ள போலீசார் அதனை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

போலீசுக்குத் தெரியும்
எனவே விரைவில் பைசூல் போலீசில் சிக்குவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவரின் துணையுடன் பைசூல் தப்பிக்க முயற்சி செய்வதாக ராதா புதிய குற்றச் சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பைசூல் எங்கிருக்கிறார் என்பது போலீசுக்கு தெரியும். அவர் தினமும் தி.நகர் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

போலீஸ் அதிகாரி உடந்தை
அவரும், தி.நகர் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரும் பைசூலை காப்பாற்ற நினைக்கிறார்கள். என்னையும், எனது பணத்தையும் அனுபவித்து விட்டு பைசூல் தப்பிக்க நினைக்கிறார். அவரது குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில் முஸ்லீம் அமைப்பின் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் நான் புகார் செய்திருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய்.

ஜமாத்தில்...
பைசூல் மீது நான் ஜமாத்தில் புகார் செய்த பின்னர் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதன் பிறகே பைசூல் மீது போதை பொருள் கடத்தியதாக புகார் செய்துள்ளனர். எனக்கு நியாயம் கிடைக்குமா? என்று தெரியவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











