ஜாலியாக ஊர் சுற்றும் நாயகன்.. பணக்கார நாயகி... "வலியுடன் ஒரு காதல்"!
சென்னை: முன்னாள் நாயகி ராதாவின் சகோதரி மகள் கெளரி நம்பியார் நடிக்கும் புதிய படம் வலியுடன் ஒரு காதல்.
புதுமுகம் ராஜேஷ் நாயகனாக நடிக்க அவருடன் இணைகிறார் கெளரி நம்பியார்.
மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

கெளரி நம்பியார்
கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார். இவர் நடிகை ராதாவின் சகோதரி மகள் ஆவார்.

சித்தி மகள்கள் வரிசையில்
ஏற்கனவே ராதாவின் இரு மகள்களான கார்த்திகா, துளசி ஆகியோர் நடிக்க வந்து விட்டனர். அந்த வரிசையில் தற்போது சேருகிறார் ராதாவின் சகோதரி மகள் கெளரி.

உமா ரவியும்
படத்தில் உமா ரவி, வின்சென்ட் சுரேஷ், பஞ்சர் பாஸ்கர், சபா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சஞ்சீவன் இயக்கம்
ஒளிப்பதிவை எஸ்.செல்வகுமார் கவனிக்க, இசைக்கு - ஜே.கே.செல்வா, பாடல்களுக்கு உமாசுப்பிரமணியம், கலைக்கு சுந்தர்ராஜன், நடனத்திற்கு கேசவ் என கலைஞர்கள் இடம் பெறுகின்றனர். படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சஞ்சீவன். படத்தைத் தயாரிக்கிறார் ரவி ராஜேஷ்.

ஊர் சுற்றும் நாயகன்...
பட பற்றி இயக்குனர் சஞ்ஜீவனிடம் கேட்டோம்.. கிராமத்தில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ராஜேஷ். பக்கத்து ஊரில் உள்ள பணக்கார நாயகியை காதலிக்கிறான். இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

முடிவில் ஜெயித்ததா காதல்
முடிவில் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பதைத் தான் திரைக்கதையாக்கி இருக்கிறோம்.

யாருமே ஊகிக்க முடியாதே
கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திகைப்பூட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











