கபாலி நடிகை ராதிகா ஆப்தேவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

மும்பை : கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.

ஹிந்தி பெங்காலி மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பட்டையை கிளப்பி வரும் ராதிகா தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கபாலி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான இவர் செப்டம்பர் 7ம் தேதியான இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புது ரூட்டை

புது ரூட்டை

சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் போல்டான காட்சிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் என சினிமாவில் தனக்கென ஒரு புது ரூட்டை அமைத்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

ஹிந்தி பெங்காலி உள்ளிட்ட மொழிகளில்
நடித்து பட்டையைக் கிளப்பி வரும் இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். எனினும் இவர் முதன்முதலில் இந்தியில் " வா! லைப் ஹோ
தோ ஐசி " என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

தென்னிந்தியாவிலும் பிரபலம்

தென்னிந்தியாவிலும் பிரபலம்

அதை தொடர்ந்து "அந்தாஹீன்" என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்த இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. இந்தி மற்றும் தெலுங்கில் ஒருசேர உருவான "ரத்தசரித்திரம் " திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே பின் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நேரடி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்

அடுத்தடுத்து தமிழில்

அடுத்தடுத்து தமிழில்

அவ்வாறு தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமான "தோனி" இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தரவில்லை என்றாலும் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

தோனி திரைப்படத்தை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு "கபாலி" மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத்தந்தது.

தமிழ் ரசிகர்களிடமும்

தமிழ் ரசிகர்களிடமும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்த இவரின் நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் தமிழ் ரசிகர்களிடமும் இவர் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.

சர்ச்சைக்குரிய திரைப்படங்களில்

சர்ச்சைக்குரிய திரைப்படங்களில்

இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என கலக்கி வரும் ராதிகா ஆப்தே அதேசமயம் ஹிந்தியிலும் பல்வேறு திரைப்படங்கள் நடித்து அசத்தி வருகிறார். ஃபர்சட், ஃபோபியா, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட அடல்ட் கண்டெண்ட் நிறைந்த சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்த ராதிகா அதே சமயம் ஃபேட் மேன், அந்தாதூன் உள்ளிட்ட தரமான திரைப்படங்களிலும் நடித்து பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல்

திரைப்படங்களில் மட்டுமல்லாமல்

பெண்களுக்கு எதிரான சமூக அநீதி மீறல்கள் மற்றும் கொடுமைகள் பற்றி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் தைரியமாக தனது கருத்துக்களை பதிவிடும் ராதிகா ஆப்தே
இன்றுவரை பெண்களுக்காக சமூகத்தில் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டுவருகிறார்.

35வது பிறந்தநாள்

35வது பிறந்தநாள்

இவ்வாறு இந்திய ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள ராதிகா ஆப்தே செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X