Radhika sarathkumar: முதலும் நீ.. முடிவும் நீ.. ராதிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மகள் ரயான்!

சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரின் திரைப்பயணம் மிகவும் சிறப்பானது. சிறப்பான பின்புலத்துடன்தான் அவர் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இங்கு நீடித்து நிற்பதற்கு அவருக்கு அது மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. நடிப்பை மீறி பல விஷயங்களை சாத்திய படுத்தியவர் ராதிகா.

நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார் ராதிகா சரத்குமார். அரசியலிலும் இவர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Radhika Sarathkumar Rayane mithun Instagram

நடிகை ராதிகா சரத்குமார்: நடிகை ராதிகா சரத்குமார் பல ஆண்டுகளாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். வெள்ளந்தியான நாயகியாக துவங்கிய இவரது நடிப்புப் பயணம் சடாரென மாறி விடவில்லை. அதற்காக ராதிகா செய்த மெனக்கெடல்கள் அதிகம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாயகியாக களமிறங்கிய ராதிகா, அதிரடி ஆக்ஷன் ஹீரோயினராக தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார். தற்போது தன்னுடைய வயதிற்கேற்ற கேரக்டர்களில் ஹீரோக்களின் அம்மாவாக தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அம்மா கேரக்டர்களில் மாஸ்: சிவகார்த்திகேயன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அம்மாவாக நடித்து வருகிறார் ராதிகா. ஒவ்வொரு படத்திலும் அம்மா கேரக்டர்களிலும் வித்தியாசத்தை காட்ட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவரது மகள் ரயானும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்துவரும் ரயான் மிதுன், தன்னுடைய முதலும் முடிவும் தன்னுடைய அம்மாதான் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரயான் வாழ்த்து: தன்னுடைய அம்மாவுடன் தான் போஸ் கொடுத்துள்ள பழைய புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரயான், தன்னுடைய வலிமை, அன்பு மற்றும் அக்கறையால் அனைத்து விஷயங்களையும் பெட்டராக ராதிகா மாற்றி விடுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள ரயான், தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உறவை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் அது மேலும் ஸ்பெஷலாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


பெஸ்ட் ஃபிரெண்ட் அம்மாதான்: தன்னுடைய அம்மா ராதிகா தன்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்டாக மட்டுமில்லாமல் தன்னுடைய எல்லாமுமாக இருப்பதாகவும் ரயான் மிதுன் கூறியுள்ளார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு தான் தன்னுடைய அம்மா ராதிகாவை நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவின் மகளான ரயான் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து ரயான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X