பச்சப் புள்ள தோத்துடும் போல.. தடுப்பூசிக்கு அப்படி பயப்படும் பிரபல நடிகை.. செம மெசேஜும் இருக்கு!
மும்பை: பாலிவுட் நடிகை ராதிகா மதன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என பலரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கும் நோக்கில் பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ராதிகா மதன்
கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிரபல இந்தி சீரியலான மெரி ஆஷிக்கி தும் சே ஹை தொடரின் மூலம் அறிமுகமான ராதிகா மதன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து டிவி தொடர்களில் நடித்து கலக்கி வந்த இவர், கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான படாகா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இர்ஃபான் கான் ஹீரோயின்
கடந்த 2020ம் ஆண்டு வெளியான மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் ஆங்கிரேஸி மீடியம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை ராதிகா மதன். மேலும், சித்தாத் எனும் பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான ரே வெப்சீரிஸிலும் இவர் நடித்துள்ளார்.

தடுப்பூசிக்கு
பொதுவாக ஊசி போட வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு பயம் தான். ஆனால், பெரியவர்கள் அசால்ட்டாக ஊசிகளை போட்டுக் கொள்வர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை பச்சப் புள்ளைக்கு நிகராக பயந்து கொண்டே நடிகை ராதிகா மதன் செலுத்திக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறக்காம போட்டுக்கோங்க
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்ட நடிகை ராதிகா மதன் மக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்மை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நல்ல மெசேஜ் சொல்லியுள்ளார்.

ஊசி போடும் போது
மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளார் நடிகை ராதிகா மதன். டபுள் மாஸ்க்குகளை போட்டுக் கொள்ளுங்கள், எதையும் தொடாதீங்க, சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பான முறையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











