ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. விஜய் சேதுபதி!

சென்னை: மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்தப்படியே நடிகை ராதிகா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகை ராதிகா கேளடி கண்மணி படத்தில் பாடகர் எஸ்பிபிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் சாரதா டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராதிகா.

இதனால் படப்பிடிப்பில் கூட தன்னை சாரதா டீச்சர் என்றே எஸ்பிபி அழைப்பார் என ஊடகங்களில் அவருடனான நினைவுகளை பகிர்ந்தார் ராதிகா.

தனக்கு கிடைத்த பாக்கியம்

தனக்கு கிடைத்த பாக்கியம்


அதோடு அந்தப்படத்தில் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார் எஸ்பிபி என்றும், நல்லக் கதை அதனால் ஒப்புக்கொண்டேன் என்று தான் கூறியதாகவும் கூறினார் ராதிகா. எஸ்பிபி போன்ற இசை ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார் ராதிகா.

பார்க்க முடியவில்லை

பார்க்க முடியவில்லை

மேலும் அவரது மறைவை தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் உருக்கமாக கூறினார் ராதிகா. தற்போது ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது முகத்தைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என வேதனைப்பட்டார்.

மவுன அஞ்சலி

மவுன அஞ்சலி

இந்நிலையில் ஜெய்ப்பூரில் இருந்தப்படியே படக்குழுவினருடன் சேர்ந்து எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் ராதிகா. படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் பிரமாண்ட படத்திற்கு முன் விளக்கேற்றியும் படத்திற்கு மாலை அணிவித்தும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Recommended Video

Sudha Ragunathan Speech About SP Balasubramaniam
விஜய்சேதுபதி டாப்ஸி

விஜய்சேதுபதி டாப்ஸி

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை டாப்ஸி உட்பட படக்குழுவினர் பலரும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X