மோகன் லால் இதயத்தை திருடிவிட்டார்.. சிறந்த நடிகர்களில் ஒருவர்.. திரிஷ்யம் 2வுக்கு ராதிகா பாராட்டு!

சென்னை: திரிஷ்யம் 2 படத்தை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார்,
மோகன் லாலின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியானது
திரிஷ்யம் திரைப்படம். இதில் மோகன் லால், மீனா, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சீக்குவலாக திரிஷ்யம் 2 படத்தை இயக்கியுள்ளார் ஜித்து ஜோசப்.

அமேஸான் பிரைமில்

அமேஸான் பிரைமில்

கடந்த 19ஆம் தேதி அமேஸான் பிரைமில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது. இதில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில், அன்சிபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரில்லிங், டிவிஸ்ட் என ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

நெஞ்சை பிழிந்துவிட்டார்

நெஞ்சை பிழிந்துவிட்டார்

படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் ஜித்து ஜோசப்பின் ஸ்க்ரீன்பிளேவையும் மோகன் லாலின் நடிப்பையும் புகழ்ந்து வருகின்றனர். மோகன் லால் ஜார்ஜ்க்குட்டியாகவே வாழ்ந்து நெஞ்சை பிழிந்துவிட்டார் என பாராட்டி வருகின்றனர்.

இதயத்தை திருடுகிறார்

இதயத்தை திருடுகிறார்

அந்த வகையில் நடிகை ராதிகாவும் திரிஷ்யம் 2 படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், திரிஷ்யம் 2 படம் பார்த்தேன். என்ன அற்புதமான படம். மோகன் லால் சிறப்பான நடிகராக ஜார்ஜ் குட்டியாக இதயத்தை திருடுகிறார்.

மொத்த டீம்முக்கும் பாராட்டு

மொத்த டீம்முக்கும் பாராட்டு

உண்மையிலேயே அவர் நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர். மொத்த டீம்முக்கும் பெருமை என ஜித்து ஜோசப் மற்றும் நடிகை மீனாவையும் பாராட்டியுள்ளார். ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் திரிஷ்யம் 2 படத்தை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X