பேசப்படும் படமாக மாறியுள்ளது போர்த்தொழில்.. நடிகை ராதிகா பாராட்டு !
சென்னை: போர்த்தொழில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக நடிகை ராதிகா சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் போர்த்தொழில்.
இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

போர்த்தொழில்: சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ராட்சசன் படத்திற்கு பிறகு அதைப்போன்ற சிறந்த த்ரில்லர் படத்தை பார்த்ததாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். பாடல்கள், பெரிய அளவிலான சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் ஏதும் இல்லாமல் கதையின் கருவையும், திரைமொழியையும் மட்டுமே நம்பி மிகவும் அட்டகாசமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நல்ல வரவேற்பு: இப்படம் வெளியான 10 நாட்களில் 23.10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லாப கணக்கில் படத்தின் வசூல் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்த்தொழில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை அடுத்து, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
கூடுதல் திரையரங்கு: படம் வெளியாகி 2 வாரங்களை தாண்டியும் போர்த்தொழில் படம் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பல திரையரங்குகளில் ஸ்கிரீன்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராதிகா பாராட்டு: இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு நாள் என் கணவர் வீட்டுக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா, நிச்சயம் மிகப்பெரிய ஆளாக வருவார் என்று கூறினார். போர்த்தொழில் திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று சத்யம் திரையரங்கில் படம் பார்த்தேன்.
திரையரங்கில் கூட்டம்: கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கூட்டத்தால் திரையரங்கம் நிரப்பி வழிந்தது. கணவர் சரத்குமார், அசோக் செல்வன், இயக்குனர் விக்னேஷ் ராஜா உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் கதைக்கரு மக்களுக்கு பிடித்திருப்பதால் அவர்கள் விரும்பி படம் பார்க்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











