பிரபலங்களின் பெயரில் போலி கணக்கு… மூளையில்லாத… வேலையற்றவர்களின் வேலை… ராதிகா சரத்குமார் ட்வீட் !

சென்னை : இயக்குனர் மணிரத்னம் பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டதற்கு நடிகை ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூளையில்லாத மற்றும் வேலையற்றவர்களின் வேலை என தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

இதேபோல சுஹாஷினியும் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது கண்டனத்தை பதிவிட்டு இருந்தார்.

போலி கணக்கு

போலி கணக்கு

திரையுலக பிரபலங்களின் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்டோரின் பெயர்களில் போலி கணக்குகள் உள்ளன. அந்த போலி கணக்குகளை நிஜம் என்று நம்பி பலரும் பின்தொடர்கிறார்கள். இதுகுறித்து யோகிபாபு கூட அண்மையில் புகார் தெரிவித்து இருந்தார்.

போலி கணக்கு

போலி கணக்கு

இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் அன்று, அவரது பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி சுஹாசினி, அது போலி கணக்கு அந்த நபர் போலியானவர், எனவே தயவு செய்து கவனமாக இருக்கவும், மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

மூளையில்லாதவர் வேலை

மூளையில்லாதவர் வேலை

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தள பக்கத்தில், சில சமயங்களில் நாம் இந்த உலகத்தை மீட்பவர்கள் என நினைக்கும் மூளையில்லாத மற்றும் வேலையற்றவர்கள் இருப்பதை நாம் தெரிந்துவைத்து இருக்க வேண்டும்.

வீணாக்கவிரும்பவில்லை

வீணாக்கவிரும்பவில்லை

இணையத்தில் நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் கொண்டிருக்கலாம், முட்டாள்தனமாக நிறைய தேர்வு செய்வதை நான் காண்கிறேன். இனி என் நேரத்தையும் சக்தியையும் வீணாக்க விரும்பவில்லை என்று மிகவும் கோபமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X