நடிப்பு ராட்சசி ராதிகா சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: பட்டாசு போன்ற வெடிக்கும் சிரிப்பு சத்தம் மற்றும் கிளிசரின் போடாமலேயே கண்ணீரை வரவழைக்கும் நேச்சுரல் ஆக்டிங் என நடிப்பில் கலக்கி கொண்டு வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.

Recommended Video

V-CONNECT WITH ACTRESS VARALAXMI | Heroine chance தர மாட்றாங்க | FILMIBEAT TAMIL

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் படி பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றி தமிழ் குடும்பங்களின் மனதுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகையாக இருந்து வரும் ராதிகா சரத்குமார் ஆகஸ்ட் 21 ஆம் தேதியான இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

பவள முத்து

பவள முத்து

இயக்குனர் பாரதிராஜா கண்டெடுத்த பல முத்துக்களில் சினிமாவில் என்றும் நிலைத்து நிற்கும் பவள முத்தாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். 1980களின் ஆரம்ப கட்டத்தில் நடிக்கத் தொடங்கிய ராதிகா இன்று வரை நிற்காமல் கிட்டத்தட்ட 42 வருடங்களைத் தாண்டி தொடர்ந்து சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக்கொண்டு வருகிறார்.

பாஞ்சாலி

பாஞ்சாலி

கதாநாயகி, குணச்சித்திர கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரம் என எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் ராதிகா சரத்குமார் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய "கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தின் மூலம் பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். நடிகர் சுதாகர் உடன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் ஹிட்டடித்தது.

பாலிவுட் வரை

பாலிவுட் வரை

இவ்வாறு நடிக்க தொடங்கிய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியடைந்து ராதிகாவிற்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் அதைத்தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றியடைய தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டினார்.

பிளேபாய் கதாபாத்திரத்தில்

பிளேபாய் கதாபாத்திரத்தில்

தெலுங்கில் வெளியான "நியாயம் காவாலி" என்ற திரைப்படத்தை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியவில்லை, 1981இல் வெளியான இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்து தெலுங்கிலும் எவர்கிரீன் ஹீரோயினாக ராதிகா சரத்குமார் வலம்வந்தார். படத்தில் பிளேபாயாக வந்து கடைசியில் மன்னிப்பு கேட்கும் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்திருக்க,
நடிகை சாரதாவோடு போட்டிபோட்டு நடித்திருப்பார் ராதிகா. சாரதாவை தூக்கி சாப்பிடும் பிரமாதமான நடிப்பால் சிறந்த நடிகை விருது அந்த ஆண்டு ராதிகாவுக்கு கிடைத்தது. மேலும் நியாயம் காவாலி திரைப்படம் தமிழ் மோகன், பூர்ணிமா நடிப்பில் பாக்யராஜ் இயக்கத்தில் " விதி" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அந்த ஆண்டு அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

கோபுரங்கள் சாய்வதில்லை

கோபுரங்கள் சாய்வதில்லை

அது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ராதிகா கலக்கியவர், இந்தியில் இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழ் திரைப்படத்தின் ரீமேக்தான். இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தை ஹிந்தியில் "நசீப் அப்னா அப்னா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சுஹாசினி நடித்திருந்த கதாபாத்திரத்தில், ஹந்தியில் நடித்திருந்த ராதிகா பாலிவுட் திரைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டார் மேலும் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரிஷி கபூர் நடித்து இருந்தார்.

தேவதையாக தெரிந்தார்

தேவதையாக தெரிந்தார்

இவ்வாறு தமிழில் எக்கச்சக்கமாக திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்ததால், ஹிந்தி திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் பல படங்களை தவிர்த்தார். இல்லையென்றால் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்கி இருப்பார் ராதிகா. கருப்பழகிகளை கொண்டாடும் பாலுமகேந்திராவின் "ரெட்டை வால் குருவி" யில் ராதிகா மட்டும் ஒவ்வொரு பிரேமிலும் தேவதையாக தெரிந்து இருப்பார்.

சித்தி

சித்தி

தமிழ்த் திரைத்துறையில் இவர் செய்த கலை பயணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறு திரைப்படங்களில் இன்று வரை நடித்து வரும் ராதிகா சரத்குமார் இன்றைய தலைமுறையினருக்கும் பரிச்சியமாகும் படி தெறி, நானும் ரவுடிதான் போன்ற படங்களிலும், பல்வேறு சீரியல் தொடர்களிலும் நடித்து சின்னத்திரையிலும் பிரபலமாக உள்ளார். அவ்வாறு இவர் நடித்த அண்ணாமலை, சித்தி மற்றும் சித்தி 2 என இவர் நடித்த நெடுந்தொடர்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோ என எதுவாக இருந்தாலும் சரி அதில் மக்களை ரசிக்க வைக்க இவர் எப்போதும் தவறியதில்லை. இவ்வாறு இந்திய சினிமாவின் நடிப்பு ராட்சசியாக விளங்கிவரும் நடிகை ராதிகா சரத்குமார் ஆகஸ்டு 21 ஆம் தேதியான இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏக போகமாக வாழ்த்துக்களை தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X