Radhika: திரையுலகில் 45 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் திரையுலகில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை துவக்கியவர்.

தன்னுடைய வித்தியாசமான, மாறுபட்ட, ஆளுமை மற்றும் அழுத்தமான நடிப்பால் தொடர்ந்து 45 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து வருகிறார்.

ராதிகாவின் முதல் படம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தில் தன்னுடைய வெள்ளந்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் ராதிகா.

Actress Radhika Sarathkumar completes 45 years of film career and celebrates with cake cutting

திரையுலகில் 45 ஆண்டுகளை பூர்த்தி செய்த ராதிகா: நடிகை ராதிகா சரத்குமார், கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவக்கியவர். எம்ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அதுமட்டுமே தன்னுடைய வெற்றிக்கு காரணமாக அமையாது என்று தெரிந்து வைத்திருந்தார் ராதிகா. தன்னுடைய முயற்சி மற்றும் உழைப்பால் மாறுபட்ட பல கேரக்டர்களில் நடித்து உயரங்களை தொட்ட ராதிகா தற்போது திரையுலகில் 45 ஆண்டுகளை எட்டியுள்ளார்.

முதல் படத்திலேயே இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ராதிகாவிற்கு. இந்தப் படத்தில் அப்போது முன்னணியில் இருந்த நடிகர் சுதாகருடன் ஜோடி சேர்ந்திருந்தார் ராதிகா. இந்தப் படத்தில் பாஞ்சாலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ராதிகா. படம் வெளிப்புற படப்பிடிப்புடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜாவின் இசையில் இயற்கையான சூழலில் கிராமத்து கதைக்களத்தில் இந்தப் படம் மிகப்பெரிய உயரத்தை தொட்டது.

Actress Radhika Sarathkumar completes 45 years of film career and celebrates with cake cutting

இந்தப் படம் தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் தன்னுடைய வெள்ளந்தியான நடிப்பால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ராதிகா. இந்தப் படம் வெளியாகி தற்போது 45 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் சினிமாவில் தன்னுடைய 45 ஆண்டுகளை ராதிகாவும் கடந்துள்ளார். இதையொட்டி தன்னுடைய குடும்பத்தினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராதிகாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். திரையுலகில் திறமைமிக்க நாயகிகள் தைரியம் மற்றும் ஆளுமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பானுமதி மற்றும் ராதிகா இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கிழக்கே போகும் ரயிலில் துவங்கிய ராதிகாவின் பயணம் தற்போது லவ் டுடே வரையில் தொடர்ந்து வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actress Radhika Sarathkumar completes 45 years of film career and celebrates with cake cutting

நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துவரும் ராதிகாவின் வெற்றிப்பயணம் தொடர அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் ராதிகா -சரத்குமார் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ரிவால்வர் ரீட்டா படக்குழுவினருடன் ராதிகா தன்னுடைய 45 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நடிகை ராதிகாவின் திரைப்பயணத்தில் அதிகமான படங்கள் அவரது பேர் சொல்லும் வகையில் அமைந்திருந்தாலும் குறிப்பாக, நான் பெத்த மகனே, கிழக்கு சீமையிலே, ஜீன்ஸ் என ராதிகாவின் மாறுபட்ட கேரக்டர்களில் வெளியான படங்கள் சிறப்பான கவனத்தை பெற்றவை. கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா, தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X