"பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு".. வருவைத் தொடர்ந்து விஷாலை கடுமையாக வறுத்தெடுத்த ராதிகா

விஷாலின் பிரச்சார வீடியோ தொடர்பாக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா.

Recommended Video

விஷாலை சரத்குமாரின் மனைவியும், நடிகை ராதிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ, 'பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருப்பதாக' சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறும் இத்தேர்தலில், விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இருதரப்பும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணியினரும் முன்னணி நடிகர்களை சந்தித்து ஆதரவு பெற்று வருகின்றனர்.

விஷாலின் பிரச்சார வீடியோ:

அந்த வகையில், விஷால் அணியினர் தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், கடந்த தேர்தலின் போது, தங்களுக்கு எதிராக களத்தில் இருந்த அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராதிகா அறிக்கை:

ராதிகா அறிக்கை:

இந்த வீடியோவிற்கு ஏற்கனவே சரத்குமாரின் மகளும், விஷாலின் நெருங்கிய தோழியுமான நடிகை வரலட்சுமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவும் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேடிக்கை:

வேடிக்கை:

அந்த அறிக்கையில் அவர், "23.6.2019 -ல் நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது மாதிரி வேடிக்கையாக இருக்கிறது.

ஆயிரம் அழுக்கு மூட்டைகள்:

ஆயிரம் அழுக்கு மூட்டைகள்:

விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது, முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

அருகதை இருக்கிறதா?

அருகதை இருக்கிறதா?

படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா?இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார்.

அடக்கம் தேவை:

அடக்கம் தேவை:

இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒரு போதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்" என இவ்வாறு அதில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X