எனக்கு கொரோனா இல்லை.. நலமுடன் இருக்கிறேன்.. வேலைக்கு திரும்பிவிட்டேன்.. நடிகை ராதிகா விளக்கம்!

சென்னை: தனக்கு கொரோனா என பரவும் தகவலில் உண்மையில்லை என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Radhika Sarathkumar clarification about Rumors | Sarathkumar, Case

தமிழ் சினிமாவில் முன்னணி திரை நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது.

செக் மோசடி வழக்கு

செக் மோசடி வழக்கு

இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தலா ஓராண்டு சிறை

தலா ஓராண்டு சிறை

இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து.

ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

ராதிகாவுக்கு பிடிவாரண்ட்

பின்னர் சரத்குமாரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்,
செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகாவுக்கு அண்மையில் ஓராண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது. ராதிகா விசாரணைக்கு ஆஜராகததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

இதனை தொடர்ந்து நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என தகவல் பரவியது. இந்நிலையில் நடிகை ராதிகா தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என டிவிட்டியுள்ளார்.

மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன்

மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன்

இதுதொடர்பான அவரது பதிவில், அனைவரின் அன்பு மற்றும் பாசத்திற்கும் நன்றி, எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு உடல் வலி இருந்தது அவ்வளவுதான். ஆன்லைன் பிரஸ்ஸில் உடல்நலம் மற்றும் வழக்கு பற்றி தவறாக போட்டுள்ளார்கள். நாங்கள் அதை உயர் நீதிமன்றங்களில் எதிர்த்து போராடுவோம். நான் மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X