சில்க் ஸ்மிதாவை கலாய்த்த ராதிகா சரத்குமார்..தீயாக பரவும் வீடியோ !

சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் சில்க் ஸ்மிதாவை போன்று இமிடேட் செய்து கலாய்த்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் திரைப்பட ரசிகர்களும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் அது சில்க் ஸ்மிதா.

இவர் பல ஆண்டுகளாக தனது கவர்ச்சியான நடிப்பாலும் போதையேற்றும் பார்வையாலும் பல லட்சம் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருந்தார்.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

பல படங்களிலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

வரிசை கட்டி

வரிசை கட்டி

1978ல் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். நடித்த முதல் படமே கிட்டத்தட்ட ஓராண்டை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த நிலையில், இவரின் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டிய நிலையில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர் இன்றுவரை நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து வருகிறார்.

சுவாரசியமான நிகழ்வு

சுவாரசியமான நிகழ்வு

இவ்வாறு பல படங்களில் நடித்தும் அதற்காக பல விருதுகளை வென்றும் வந்த இவர், சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கும் இவர் கொடுத்திருந்த பேட்டியில் இவரிடம் சில்க் ஸ்மிதாவை பற்றி கேட்ட கேள்விக்கு இவர் ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றை அங்கு பதிவிட்டார்.

தத்ரூபமாக

தத்ரூபமாக

அதில் ஒரு புரோடக்சன் ஆபீஸில் எதிர்பாராவிதமாக சில்க் ஸ்மிதாவை இவர் சந்தித்தபோது அங்கு நடந்த சுவாரசியமான காட்சிகளை தத்ரூபமாக சில்க் ஸ்மிதாவை போலவே பேசியும் நடித்தும் காட்டி அட்டகாசப்படுத்திருந்தார். அதில் இவர் சொன்ன விஷங்களுள் பேசிய காட்டிய விதமும் பலராலும் இன்றும் நிறைய ஷேர் செய்ய படுகிறது.

நீ பணம் குடு

நீ பணம் குடு

படத்தின் ஷூட்டிங் போவதற்கு முன் இவர் அந்த புரோடக்சன் ஆபீஸுக்கு பணம் கேட்டு போயிருந்தபோது ஆபீஸில் இருந்து வந்த ஒருவர். மேடம் பேமெண்ட் நாங்க அப்புறம் கொடுத்திடுரோம் நீங்க வந்து கொஞ்சம் நடிச்சுக் கொடுங்க என்று கேட்டதற்கு "நான் எதுக்காக வரணும்.. எனக்கு மார்க்கெட் இருக்கு.. எனக்கு நீங்க கேமரா கீழ வெப்பிங்க மேல வெப்பிங்க, நாளைக்கு மார்க்கெட் இல்லனா என்ன பண்ணுவிங்க.. நீ பணம் குடு நான் வரேன்" என்று சில்க் ஸ்மிதா பாணியில் கொஞ்சும் மொழியில் சொல்லி இருக்கிறார்.

அப்பாவித்தனமாக

அப்பாவித்தனமாக

மேலும் அருகில் யாரோ ஒருவர் மொளகா பஜ்ஜி ஒன்றை சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்த சில்க் ஸ்மிதா.. "அது என்னது?? மொளகாவா.. !! மொளகானா என்ன?? மொளகா இல்லாம அதோட பழம்.. என்று பதில் வர , ஓ மொளகா பழமா" என்று அவர் அப்பாவித்தனமாக கேட்ட அந்த சுவாரசியமான உரையாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே செய்து காட்டி ரசிக்க வைத்தார் ராதிகா சரத்குமார். இந்த வீடியோவை பார்த்த சில்க்ஸ்மிதா ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தும் ரசித்தும் இந்த வீடியோவை இடைவிடாமல் பகிர்ந்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X