வொர்க் மோடாம்.. பிளாக் அன்ட் ரெட் பேண்ட் ஷர்ட்டில்.. கையில் காஃபி கப்புடன் போஸ் கொடுத்த ராதிகா!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1970களின் கடைசி மற்றும் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. விஜயகாந்த், ரஜினி, கமல், சரத்குமார் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் அம்மா மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் சீரியல் ரியாலிட்டி நிகழ்ச்சி என கலக்கி வருகிறார் ராதிகா.

நடிகை ராதிகா..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் நடிகை ராதிகா சரத்குமார் எந்த படப்பிடிப்பிலும் பங்கேற்கமால் இருந்து வந்தார்.

மறுத்த ராதிகா
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராதிகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த ராதிகா, தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தடுப்பூசி போட்டதால் உடல் சோர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு அனுமதி
கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

போட்டோக்கள் ஷேர்
படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து நடிகை ராதிகா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தேர்தல் பணி, கொரோனா பரவல் என இருந்த ராதிகா தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள போட்டோக்களை தனது சமூக வலை தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கையில் காஃபி கப்புடன் போஸ்
அதில் சிவப்பு சட்டை கறுப்பு பேண்ட் அணிந்துள்ள ராதிகா சரத்குமார் ஹிப்பி ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். மேலும் கையில் காஃபி கப்புடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

கேர்ஃபுல்லா இருங்க
அந்த போட்டோக்களுக்கு வொர்க் மோட் என கேப்ஷன் கொடுத்துள்ள ராதிகா சரத்குமார், ஆர்வமாகதான் உள்ளது ஆனால் கடந்து வர வேண்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப கேர்ஃபுல்லாக இருங்கள் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications