ஆளாக்கிய குருவுக்காக மனம் உருகி பிரார்த்தனை செய்த ராதிகா.. எங்க தெரியுமா?

பிரான்ஸ் : இயக்குநர் மற்றும் நடிகர் பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Recommended Video

Danush movie Comparison| தோழி காதலியாக மாறும் திரைப்படங்கள் |*Rewindraja

அவர் உடல்நலன் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாரதிராஜா நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சமீப காலங்களில் இவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா அழகான பல படங்களை இயல்பான கேரக்டர்களுடன் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். அரங்கத்திற்குள் நடந்துவந்த சினிமாவை வெளிப்புற படப்பிடிப்பில் நடத்திக் காட்டியர். பல நாயகிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அந்த வகையில் ராதிகா உள்ளிட்டவர்கள் பின்னாளில் முன்னணி நாயகிகளாக வலம் வந்தனர்.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்த பாரதிராஜா, தற்போது டைரக்ஷனை விட்டுவிட்டு நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஈஸ்வரன், ராக்கி, குற்றமே தண்டனை, எங்க வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து பாரதிராஜா நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. தனுஷ் மற்றும் நித்யா மேனனுடன் இணைந்து படத்தில் இவர் செய்திருந்த அலப்பறைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாரதிராஜா. வழக்கமான செக்கப்பிற்கு சென்றபோது உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதால் தற்போது மருத்துவமனையில் அவர் ஓய்வெடுத்து வருவதாக அவரது மகன் மனோஜ் தெரிவித்துள்ளார்.

ராதிகா பிரார்த்தனை

ராதிகா பிரார்த்தனை

இந்நிலையில் அவரது உடல்நலன் தேற திரையுலக பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தற்போது நடிகை ராதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது பிரான்சில் உள்ள ராதிகா, லூர்து சர்ச்சில் பாரதிராஜாவிற்காக கேண்டில் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

தன்னுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த பாரதிராஜா சார், நல்லா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு லூர்து சர்ச்சில் தான் வேண்டிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அவர் நார்மலாக உள்ளதாகவும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X