"அதை மறக்க முடியுமா".. பழனி மலைக்கு கீழே நின்று நெகிழ்ச்சி அடைந்த ராதிகா!

சென்னை : சினிமா, சீரியல், அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர் ராதிகா சரத்குமார். எத்தக்கருத்தையும் துணிச்சலுடன் கூறும் தில் இவருக்கு உண்டு இதனால் சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் இவருக்கு பெரும் மதிப்பு உண்டு.

கதாநாயகி, குணசித்திரம், அம்மா கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுத்துவிடுவார் ராதிகா சரத்குமார்.

நடிக்க தொடங்கி நாள் முதல் இன்று வரை வெற்றி நாயகியாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

வசியம் செய்தார்

வசியம் செய்தார்

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலே திரைப்படத்தில், மாநிறத்தில், தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி அனைவரையும் வசியம் செய்தார் ராதிகா. இன்றுவரை இவர் நடித்த அந்த பாஞ்சாலி கதாபாத்திரம் பேசும் பொருளாகவே உள்ளது. நடிகர் சுதாகருடன் இவர் நடித்த இந்த படம் வெற்றி பெற்று ஹிட்டடித்து ராதிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

முதல் படமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகையாக மாறிய ராதிகாவுக்கு பல படவாய்ப்புகள் வந்தன. நிறம் மாறாத பூக்கள், போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டைவால் குருவி, ஊர்காவலன் என இவர் அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. ரஜினி , கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பாசமிகு தங்கை

பாசமிகு தங்கை

இவரது நடிப்பில் வெளியான கிழக்குசீமையிலே இன்னொரு பாச மலர் என்றே கூறப்பட்டது. பாரதிராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாசமிகு தங்கையாகவும், அமைதியான மனைவியாகவும், பாசம், கோபம் என அனைத்தை காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த படம் வெற்றி பெற்று இவரின் ரேஞ்சை மேலும் ஏற்றிவிட்டது.

கொடி காட்டி பறந்தார்

கொடி காட்டி பறந்தார்

கிட்டத்தட்டட 42 ஆண்டுகளாக திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையை ராதிகா நிகழ்த்தி வருகிறார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றியடைய தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் வரை தனது கொடியை நாட்டி அதை விசாலமாக பறக்கவும் விட்டுள்ளார் ராதிகா.

மறக்க மாட்டேன்

மறக்க மாட்டேன்

என்னத்தான் சினிமா, அரசியலில் பிஸியாக இருந்தாலும், இணையத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் தனது பழைய நினைவுகளை அசைபோட்டவாறு இணையத்தில் பழனி முருகன் கோவில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், இங்கு தான் என் முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயிலே படப்பிடிப்பு தொடங்கியது. இந்த இடத்தை என் வாழ்நாளில் என்று மறக்கமாட்டேன் என , தனது நினைவை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X