கண்ணை மூடிட்டு.. ருசிச்சு சுவைச்சு குடிச்ச ராதிகா.. தெய்வீகமய்யா!
சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் காஃபி டம்ளருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வரும் நிலையில், ஹேப்பி மானிங் என கூறியுள்ளார்.
இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகையாக
தமிழ் சினிமா கடந்த நாற்பதாண்டுகளாக பல பரிமாணங்களை அடைந்த போதும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைத் தொடர்ந்த தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார் ராதிகா. கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அப்பாவி கிராமத்து பெண்ணாக அறிமுகமான ராதிகா, அவரது இரண்டாவது படமான நிறம் மாறாத பூக்கள் படத்தில் நகரத்து பெண்ணாக நடித்து பெயர் பெற்றார்.

பல விருதுகள்
அந்த படங்களில் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கில் பேசப்படும் நடிகையாக மாறிவிட்டார் ராதிகா. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர பல ஹிட் படங்களில் நடித்தார். 80களில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா பல விருதுகளையும் வென்றார். கிழக்கு சீமையிலே படத்திற்குப் பிறகு புதிய அவதாரத்தை எடுத்து உச்சாணிக் கொம்பில் ஏறினார் ராதிகா.

சீரியலில் நடிக்கவில்லை
சின்னத்திரையில் தனது தடத்தை பாதித்த ராதிகா, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி என பல சீரியல்களில் நடித்தார். சமீபத்தில் சீரியல்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும் சில தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

ரசித்து ருசித்து
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் கையில் காஃபி டம்ளருடன் கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசித்து மெய்மறந்து காஃபியை குடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஹேப்பி மானிங்க என பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











