கணவருக்கு பிறந்தநாள்.. கேக் கட்டிங்.. கட்டிப்பிடித்து வாழ்த்து.. ராதிகா ஷேர் செய்த அசத்தல் போட்டோ!

சென்னை: நடிகர் சரத்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோவை அவரது மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார், பத்திரிக்கையாளர், பாடகர், இயக்குநர், அரசியல்வாதி என பல முங்களை கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்குமார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ள சரத்குமார், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

1984ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்ட சரத்குமாருக்கு வரலக்ஷ்மி, பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நக்மாவுடன் அவருக்கு ஏற்பட்ட உறவை அறிந்த அவரது மனைவி விவாகரத்து கோரினார்.

ராதிகாவுடன் திருமணம்

ராதிகாவுடன் திருமணம்

2000ஆம் ஆண்டு சாயாவும் சரத்குமாரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நடிகர் சரத்குமார் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மகனுடன் சேர்ந்து கணவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ராதிகா.

எல்லாம் கிடைக்கட்டும்

எல்லாம் கிடைக்கட்டும்

அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதிகா. சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா, மகிழ்ச்சி, உடல்நலம், பெரிய சாதனைகள் எல்லாம் கிடைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

Recommended Video

Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar
கேக் வெட்டி

கேக் வெட்டி

மேலும் இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் ராதிகா. அதோடு, நள்ளிரவு 12 மணிக்கு மகனுடன் சேர்ந்து கணவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ராதிகா அவரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X