இந்த வயசுலயும் இப்படி ஒர்க்கவுட்டா…. ராதிகா சரத்குமாரின் வைரல் வீடியோ…ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ராதிகா சரத்குமார் சினிமா துறையில் பல சதாப்தங்களை கடந்து தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையிலும் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார் சித்தி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து திடீரென விலகினார். ஆனால் அந்த சீரியலை தொடர்ந்து தயாரிப்பேன் என்றும் அவர் கூறி இருந்தார். அந்த சீரியல் தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சீரியலிலிருந்து விலகியதாக தெரிகிறது.

மக்களை ரசிக்க வைப்பார்
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோ என எதுவாக இருந்தாலும் சரி அதில் மக்களை ரசிக்க வைகக இவர் எப்போதும் தவறியதில்லை. இப்படி எங்கு கால் பதித்தாலும் அதில் தனிமுத்திரைப்பதித்துவிடுவது இவரின் ஸ்பெஷலிட்டி.
வீட்டில்ஓய்வாக
தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் குடும்பத்துடன் ஒய்வு எடுத்து வருகிறார் ராதிகா சரத்குமார். சமீபத்தில் இவர், மழையை வரவேற்று ரசித்து ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
Recommended Video

வெறித்தனமான ஓர்க் கவுட்
இந்த ஊரடங்கில் நடிகர்களின் பிரதான பொழுதுபோக்கே இன்ஸ்டா கிராம், ட்விட்டர் அதில் ஆக்டிவாக இருக்கம் ராதிகா சரத்குமார் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











