நடிகை ராதிகாவுக்கு கொரோனா.. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியான பகீர் தகவல்!
சென்னை: நடிகை ராதிகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1970களின் கடைசி மற்றும் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. விஜயகாந்த், ரஜினி, கமல், சரத்குமார் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் அம்மா மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் சீரியல் ரியாலிட்டி நிகழ்ச்சி என கலக்கி வருகிறார் ராதிகா.

ரூ. 2 கோடி கடன்
இந்நிலையில் நடிகை ராதிகா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ராடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது.

செக் மோசடி வழக்கு
இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.
இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

6 மாதத்தில் முடிக்க
இந்நிலையில் நடிகை ராதிகா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ராடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது.

சிறை தண்டனை
இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

ராதிகாவுக்கு கொரோனா
பின்னர் சரத்குமாரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு நீதி மன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதிகா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம்
நடிகை ராதிகா கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் சரத்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











