பிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்.. தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு.. கொலையா? தற்கொலையா?
பிரபல நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் ஜோலார்பேட்டை அருகே தூக்கி தொங்கிய நிலையில் உயிரிழந்தார்.
Recommended Video
வேலூர்: பிரபல தொலைக்காட்சி நடிகை ராகவியின் கணவர் ஜோலார்பேட்டை அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் ராஜா சின்ன ரோஜா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ராகவி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருகிறார். திருமதி செல்வம், மகாலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
ராகவியின் கணவர் பெயர் சசிகுமார். இவர் ஒரு ஒளிப்பதிவாளர். இருவரும் எட்டு வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

ஆண் சடலம்
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ராகவியின் கணவர்
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அது பிரபல நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரியவந்தது.

உறுதி செய்த ராகவி
சென்னை வளசரவாக்கத்தில் இருந்த ராகவிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் ஜோலார்பேட்டை கிளம்பி வந்து, இறந்தது தனது கணவர் தான் என உறுதி செய்தார்.

கடன் பிரச்சினை
இறந்து போன சசிகுமார் மீடியாவில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வருகிறார். அவருக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் வேலை செய்யும் அலுவலகத்துக்கு சொந்தமான கேமராவை விற்றுவிட்டதாக தெரிகிறது.

வீட்டைவிட்டு வெளியேறினார்
இதனால் ஏற்பட்டு பிரச்சினையின் காரணமாக அவர் கடந்த 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இந்த நிலையில் தான் ஜோலார்பேட்டை அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகேஷுடன் பிரச்சினை
சசிகுமாருக்கும் அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கு ஏற்கனவே தொழில் ரீதியாக பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சசிகுமார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் 'கேமரா திருடன்' என வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பியிருக்கிறார் மகேஷ். சசிகுமார் மனமுடைய இதுவும் ஒரு காரணம் என போலீசாரிடம் ராகவி தெரிவித்துள்ளார்.

கொலையா? தற்கொலை?
எனவே சசிகுமாரின் மரணம் கொலை? தற்கொலை? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. கணவரின் மறைவால் உடைந்து போயிருக்கிறார் நடிகை ராகவி.


Click it and Unblock the Notifications











