வெயில் நேரத்துல வியர்க்க விறுவிறுக்க ஒர்க் அவுட்… ராய் லட்சுமியின் வெறித்தன வீடியோ !
சென்னை : கவர்ச்சி புயலாக மாறி உள்ள ராய்லட்சுமி, ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை வெளேரென இருக்கும் தனது தேகத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பவர் நடிகை ராய் லட்சுமி.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் தயங்காது கவர்ச்சி காட்டி வருகிறார்.

முதல் திரைப்படம்
நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தன. குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஓரளவு பட வாய்ப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் நடித்துக் கொண்டு இருந்த இவருக்கு ஜெயம்ரவியின் தாம்தூம் ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை.
Recommended Video

பட வாய்ப்பு இல்லை
கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, தாராளமாக அனைத்தையும் காட்டினார். இதையடுத்து, அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகை என்ற பெயரை எடுக்க முடியவில்லை. இவர் கடைசியாக சவுகார் பேட்டை என்ற படத்தில் நடித்தார் அந்த படமும் சரியாக ஓடவில்லை.
வெறித்தனமாக ஒர்க் அவுட்
இனிமேல் பாலிவுட் தான் எல்லாம் என எண்ணி பாலிவுட் பக்கம் தாவிய ராய்லட்சுமி, உடல் எடையை குறைத்து பஞ்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கிவிட்டார். தற்போது இவர், வியர்க்க விறுவிறுக்க வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வீடியோ என்னமோ வெறித்தனமாத்தான் பாவம் பட வாய்ப்புத்தான் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் முனுமுனுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











