அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கிளாமரில் போட்டி.. இன்ஸ்டா போட்டோ பார்த்து கிர்ர்ராகும் ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல நடிகைகளின் புகைப்படங்களைக் கண்டு அக்காவுக்கும் தங்கைக்கும் கிளாமர் போட்டி வைக்கலாம் போலயே என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika

பிரபல இந்தி நடிகை ரைமா சென். தமிழில் தாஜ்மஹால், அரசாட்சி படங்களில் நடித்த ரீமா சென்னின் அக்கா.

இந்தி மற்றும் பெங்காலியில் பல படங்களில் நடித்துள்ள ரைமா சென், இப்போது தமிழில் அறிமுகமாகிறார்.

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இவர். இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷராஹாசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங், கஜகஸ்தானில் கடும்பனிப்பொழிவுக்கு இடையே நடந்துள்ளது.

கிளாமர் ரோல்

கிளாமர் ரோல்

இந்தப் படத்தில் கிளாமர் ரோல், ரைமா சென்னுக்கு. அவர் தொடர்பான காட்சிகள் கொல்கத்தாவில் படமாகியுள்ளது. லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் ரைமா சென், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதை ரசிப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவர் பக்கத்துக்கு வருகின்றனர்.

ரியா சென்னுக்கும்

ரியா சென்னுக்கும்

இவரைப் போலவே இவரது சகோதரி ரியா சென்னுக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அவரும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கப்படிப்பவர். அவர் போட்டோ மற்றும் வீடியோக்களை ரசிப்பதற்காகவே, நெட்டிசன்கள் அவர் பக்கங்களைத் தொடர்கின்றனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பது போல அக்காவும் தங்கையும் கிளாமரில் மிரட்டுகின்றனர்.

புலித்தோல்

புலித்தோல்

ரியா சென் இப்போது வெளியிட்டுள்ள படங்கள் வைரலாகி வருகின்றன. புலித்தோல் போல உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோவை அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். பலர், இந்த டிரெஸ் எங்க வாங்குனீங்க? என்று கேட்டுள்ளனர். வழக்கம் போல சூப்பர், ஹாட், ஆசம் என்று புகழ்ந்துதள்ளியுள்ளனர்.

கன்னா பின்னா

கன்னா பின்னா

இந்நிலையில் ரைமா சென் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ், பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். குப்புறப்படுத்தபடி அவர் லுக் விடும் போட்டோ, கிளாமராக இருக்கிறது. இதற்கு ரசிகர்கள், தங்கள் கமென்ட்களை கன்னா பின்னாவென்று தெரிவித்துள்ளனர்.

போட்டி வைக்கலாம்

போட்டி வைக்கலாம்

ஒருவர், வயசானாலும் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க' என்று வழிந்துள்ளார். இப்படி போஸ் கொடுத்து உலகத்தை ஹாட் ஆக்குறீங்களே என்று சிலர் கேட்டுள்ளனர். ஒருவர் உங்களுக்கும் உங்க தங்கை ரியாவுக்கும் கிளாமரில் போட்டி வைக்கலாம் என்று கூறியுள்ளார். ஒருவர், உங்களை வெப்சீரிஸில் பார்க்க ஆசை. அடுத்த தொடர் எப்போ? என்று கேட்டுள்ளனர்.

நீங்க ரொம்ப அழகு

நீங்க ரொம்ப அழகு

சில வெப்சீரிஸ்களில் போல்டான காட்சிகளில் நடித்துள்ளார் ரைமா. அதனால் அவர்கள் அப்படி கேட்டுள்ளனர். ஒருவர் இந்த உலகத்திலேயே நீங்கதான் ரொம்ப அழகு என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னும் சிலர் அவர் அழகை அப்படி இப்படி என வர்ணித்துள்ளனர். இன்னும் ஓவராக புகழ்ந்து வழிந்துள்ளனர். ஒருவர் உங்களுக்கு பாடிகார்ட் வேணுமா? நான் ரெடி என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X