ஸ்பைடர் வுமனாக அதிரடி காட்டும் நடிகை ரைசா... ஷ்ஷ் என்ன அங்க பாத்தீங்கன்னா சொல்லீராதீங்க!

சென்னை : சமீபகாலமாகவே விதவிதமான பிகினி உடையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருபவர் நடிகை ரைசா வில்சன்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது செம ஸ்டைலிஷான உடையில் ஸ்பைடர் வுமன் லுக்கில் இருக்கும் வித்தியாசமான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

பிரபலத்தை கொடுத்ததோடு

பிரபலத்தை கொடுத்ததோடு

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த பெங்களூரு குயின் ரைசா வில்சன் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் மிகச் சிறிய வேடம் மட்டுமே என்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்ததோடு பல லட்சம் ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.

கெமிஸ்ட்ரி நன்றாகவே

கெமிஸ்ட்ரி நன்றாகவே

பின் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்ததோடு இருவரும் உண்மையான காதலர்கள் போலவே படத்திலும் இருந்தனர். அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க ரசிகர்கள் தொடர்ந்து பல படங்களில் உங்களை ஒன்றாக காண வேண்டும் என ஆவலுடன் உள்ளனர்.

பதறவைக்கும் திரில்லர்

பதறவைக்கும் திரில்லர்

தி சேஸ், காதலிக்க நேரமில்லை, எஃப் ஐ ஆர் மற்றும் ஹேஸ்டேக் லவ் என ரைசாவுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக இருந்தாலும் இதில் தி சேஸ் திரைப்படத்தில் இவர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளார். பதறவைக்கும் திரில்லர் காட்சிகளுடன் இந்த படம் முழுக்க முழுக்க காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. திருடன் போலீஸ், கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

இளசுகளை திண்டாட

இளசுகளை திண்டாட

கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார் ரைசா. இப்பொழுது வந்தால் பிகினி உடையில் மட்டும் தான் வருவேன் என அடம் பிடித்தவாறு தொடர்ந்து பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திண்டாட வைத்துள்ளார்.

Recommended Video

Bigg Boss Contestant Raiza, Julie, Aishwarya Beach Scenes | Filmibeat Tamil
மொட்டை மாடியில் பார்த்தல்

மொட்டை மாடியில் பார்த்தல்

இந்த நிலையில் தற்போது டைட்டான பிளாக் ட்ரெஸில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஸ்பைடர் வுமன் போல தரையில் உட்கார்ந்து போஸ் கொடுத்துக்கொண்டு பார்க்கவே செம ஸ்டைலிஷாக இருக்க " என்னை உங்க பக்கத்து வீட்டுக்காரரின் மொட்டை மாடியில் பார்த்தால்ல் கூச்சலிட்டு காட்டிக் கொடுத்து விடாதீர்கள் " என கேப்சன் போட்டு ஸ்பைடர் வுமன் ஸ்டைலில் ரைசா பதிவிட்டிருக்கும் இந்த அட்டகாசமான பதிவிற்கு லைக்குகள் எக்கச்சக்கமாக வர செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: raiza wilson ரைசா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X