அய்யய்யோ.. அவங்க சொல்றத பார்த்தா 21 நாள் கழிச்சு.. ரைஸா ரைஸ் பேக் மாதிரி ஆயிடுவாங்க போலயே!

சென்னை: நடிகை ரைஸா வில்சன் வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக சாப்பிடுவதாக கூறியுள்ளார்.

Recommended Video

கொரோனாவை ஒரு கை பார்ப்போம் | ACTRESS KASTHURI | FILMIBEAT TAMIL

நடிகை ரைஸா வில்சன் மாடலாக இருந்து திரைத்துறைக்கு அறிமுகமானார். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள ரைஸா, வேலையில்லா பட்டதாரி 2 வில் நடித்துள்ளார்.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். இதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா வில்சன்.

 அட போங்கய்யா

அட போங்கய்யா

எப்போதும் மேக்கப் கிட்டும் கையுமாக இருந்த ரைஸா, அடிக்கடி அட போங்கய்யா என்ற டயலாக்கை பயன்படுத்தி வந்தார். இன்றும் அவரது ரசிகர்களில் பலர் அந்த டயலாக்கை பயன்படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைஸாவுக்கு எதிர்பார்த்தை போலவே பட வாய்ப்புகள் கிடைத்தன.

 தனுசு ராசி நேயர்களே

தனுசு ராசி நேயர்களே

பிக்பாஸ் முதல் சீசனில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

 செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

தொடர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைஸா அவ்வப்போது பூனைக்குட்டி, நாய்க்குட்டி என செல்லப்பிராணிகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

 லாக் டவுன்

லாக் டவுன்

அதோடு கிளாமர் போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி திணறவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால் ஷுட்டிங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு திரைப் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

நான் மட்டும்தானா?

இதேபோல் ரைஸாவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வேறு யாராவது வழக்கமான அளவை விட இருமடங்காக சாப்பிடுகிறார்களா அல்லது அது நான் மட்டும் தானா என கேட்டுள்ளார். அவரது அந்த பதிவுக்கு பலரும் பதில் கூறி வருகின்றனர்.

நானும் அப்படிதான்

ஆமாம் நானும் அப்படிதான் காலை பிரேக் ஃபாஸ்ட் இரண்டு முறை, மதியம் லஞ்ச் இரண்டு முறை, இரவு டின்னர் இரண்டு முறை சாப்பிடுகிறேன் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், ஆமாம் பெண்ணே நானும் அப்படிதான் சாப்பிடுகிறேன். அதோடு நேரம் தவறியும் சாப்பிடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

கவலையாக இருக்கிறது

எல்லோரும் அதையேதான் செய்கிறோம்.. ஏனென்றால் சாப்பிடுவதையும் தூங்குவதையும் தவிர வீட்டில் வேறு எந்த வேலையும் இல்லை என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் நான் மூன்று மடங்கு சாப்பிடுகிறேன், என்னுடைய எடையை நினைத்தால் கவலையாக உள்ளது. இதை எப்படி கையாள போகிறேனோ தெரியவில்லை என கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: actress raiza நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X