மீண்டும் புதிய ஸ்கின் கிளினிக் முகத்தில் வீக்கம் வடிந்தது இப்படிதான் மனம் திறந்த நடிகை ரைஸா வில்சன்!

சென்னை: தனது முகத்தில் ஏற்பட்ட வீக்கம் எப்படி வடிந்தது என்பது குறித்து நடிகை ரைஸா வில்சன் மனம் திறந்துள்ளார்.

பிரபல மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரைஸா வில்சல். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது தி சேஸ், எஃப்ஐஆர், அலைஸ், காதலிக்க நேரமில்லை, ஹேஷ்டேக் லவ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தவறான ஃபேசியல் சிகிச்சை

தவறான ஃபேசியல் சிகிச்சை

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரைஸா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீங்கிய முகத்துடன் போட்டோ ஒன்றை ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு தவறான ஃபேசியல் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது முகம் வீங்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.

ரைஸாவுக்கு நோட்டீஸ்

ரைஸாவுக்கு நோட்டீஸ்

மேலும் சம்பந்தப்பட்ட ஸ்கின் கிளினிக் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த ஸ்கின் கிளினிக் பதிலுக்கு 5 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பழையப்படி போட்டோக்கள்

பழையப்படி போட்டோக்கள்

நடிகை ரைஸாவுக்கும் ஸ்கின் கிளினிக்குக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார் நடிகை ரைஸா வில்சன். இந்நிலையில் தற்போது மீண்டும் பழையப்படி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட தொடங்கி விட்டார்.

வீக்கம் வடிந்தது எப்படி?

வீக்கம் வடிந்தது எப்படி?

இதனை பார்த்த ரசிகர்கள் வீக்கமெல்லாம் வடிந்து விட்டது எப்படி என கேட்டு வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் நடிகை ரைஸா வில்சன், தன்னுடைய முகத்தில் வீக்கம் வடிந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ளார்.

5 வார சிகிச்சை

5 வார சிகிச்சை

அதாவது, நடிகை ரைஸா வில்சன் புதிய ஸ்கின் கிளினிக் ஒன்றிற்கு சென்றதாகவும் அங்கு எடுத்துக்கொண்ட ஐந்து வார சிகிச்சைக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடிக்கடி இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளாதீர்கள் என அறிவுரை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X