அய்யோ பாவம்.. இதெல்லாம் தேவையா.. செல்பி எடுக்கப் போய் உதட்டில் காயமடைந்த பிக் பாஸ் நடிகை!

நடிகை ரைசா வில்சனுக்கு செல்பி எடுக்கும் போது காயம் ஏற்பட்டது.

சென்னை: செல்பி எடுக்க முயற்சிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததாக நடிகை ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்த ரைசா, சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

Actress Raiza Wilson injured while taking selfie

தமிழில் தனுஷ், அமலா பால், நடித்த விஐபி 2 படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், தமிழக மக்களிடயே பிரபலமானார். இதனால் படவாய்ப்புகள் குவியத்தொடங்கின.

ஹரிஷ் கல்யானுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர்', காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் ரைசா நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "மெத்தையில் படுத்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றேன். அப்போது கையில் இருந்து செல்போன் நழுவி வாயில் விழுந்துவிட்டது. இதில் உள் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. சின்ன காயம் தான் என்றாலும் வலி அதிகமாக இருக்கிறது", என தெரிவித்துள்ளார்.

ரைசாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செல்பி எடுக்க முயன்று ரைசாவுக்கு காயம் ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X