பெரிய தொப்பி.. குட்டி ட்ரவுசர்.. நம்ம ரைசாவா இது..அடையாளமே தெரியல !
சென்னை : பெங்களூருவை சேர்ந்த இந்த பியூட்டிஃபுல் குயின் தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தனது அசரவைக்கும் அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
எப்போதும் க்யூட்டாக காணப்படும் ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல லட்சம் ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் ஒரு இளம் குயினாக வலம் வருகிறார்.

பியார் பிரேமா காதல்
தமிழில் வெளியான பிரபல ரியாலிட்டி ஷோவின் மூலம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ரைசா வில்சன் தற்போது தமிழ் திரைப்படத்துறையில் வளரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த ரைசா வில்சன் தமிழில் வி.ஐ.பி 2, பியர் பிரேமா காதல் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

வெற்றிப் படங்களின்
தனது சொக்கவைக்கும் அழகால் ரசிகர்களை எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரைசா வில்சன் திரைப்படங்களில் தனது சூப்பரான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் கவர்ந்து வருகிறார்.

அரை டஜன் படங்கள்
தமிழில் விஐபி-2 மற்றும் தனுசு ராசி நேயர்களே போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இவர் தற்பொழுது தமிழில் அரை டஜன் படங்களுடன் நடித்து வருகிறார். ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர் ஹாஸ்டக் லவ் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

வாயைப் பிளக்க
இவ்வாறு பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பல படங்களில் நடித்து வரும் ரைசா தற்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்து வாயைப் பிளக்க வைத்துள்ளது.

குட்டி ட்ரவுசரை
ஆளே அடையாளம் தெரியாதவாறு ஒரு நீண்ட தொப்பியை அணிந்து கொண்டு எப்போதும் அணிவதை விட சற்று குறைவான குட்டி ட்ரவுசரை போட்டுக் கொண்டு தனது பளபளக்கும் முன்னழகு மற்றும் கால்கள் மட்டும் தெரியுமாறு கடற்கரையில் துணியால் விரிக்கப்பட்ட தரையில் உட்கார்ந்தவாறு தொலைபேசியை பார்த்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாதவர் போல தனது முகம் முழுவதும் மறைந்திருக்கும் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆச்சரியமடைந்த ரசிகர்
இதைப்பார்த்த அனைவரும் ரைசாவை க்யூட் ஏஞ்சல் என வர்ணித்து வரும் வேளையும் ஒருசிலர் நீங்களா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் ரைசா நீண்ட தொப்பி அணிந்திருந்ததால் முகம் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர் ஒருவர் "ஒரு நிமிடம் உங்களுக்கு தலை இல்லையோ என பதறி விட்டேன்" என கேலிக்கையுடன் பதிவிட்டிருந்தார்.

போதையேற்றும் சிரிப்பு
அதேசமயம் பலரும் உங்களது க்யூட்டான முகத்தையும், போதையேற்றும் சிரிப்பையும் தயவு செய்து காட்டுங்கள் என கெஞ்சி கேட்டு வருகின்றனர். இதுவரையிலும் தனது அழகான முகத்தை பல்வேறு முகபாவனைகளால் புகைப்படங்களில் பதிவிட்டு வந்த ரைசா முதன் முறையாக முகத்தை முற்றிலும் தொப்பியின் மூலம் மறைத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரசிக்கும் நிலையில் ஒரு சிலர் இவரின் க்யூட்டான முகத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











