கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான ரைஸா வில்சன் கடற்கரையில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். மாடலான இவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவரது நடிப்பில் வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

சோஷியல் மீடியா
தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள தி சேஸ் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரைஸா வில்சன் அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

விதவிதமான பிகினி
கடந்த சில நாட்களாக பிகினி போட்டோக்களை வெளியிட்டு ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார். கடற்கரையில் முகாமிட்டுள்ள ரைஸா விதவிதமான பிகினியில் நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார்.

வலை போன்ற ஒவர் கோட்
அந்த வகையில் கடைசியாக அவர் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பூராவும் ஜன்னலாய் இருக்கிறதே என பதிவிட்டிருந்தனர். காரணம் உள்ளாடைகளை அணிந்து மேலே வலை போன்ற ஓவர் கோட்டை அணிந்திருந்தார்.

கடல் கன்னி ஃபீலிங்
இந்நிலையில் மேலும் ஒரு போட்டோவை வெளியிட்டு திணறடித்துள்ளார் ரைஸா வில்சன். அதாவது கடற்கரை மணலில் ஃபுல் மேக்கபில் தொடை தெரிய ஒய்யாரமாய் படுத்திருக்கும் ரைஸா வில்சன், கடல் கன்னி பீலிங் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஐ லவ் யு
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே கடற்கன்னி போன்றுதான் இருக்கிறீர்கள் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். பலரும் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் ஐ லவ் யூ என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











