எத்தனை டிரெஸ்.. வீக்கம்லாம் வடிஞ்சு.. வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்திய ரைஸா!

சென்னை: நடிகை ரைஸா வில்சன் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மாடலிங்கும் செய்து வரும் ரைஸா, தற்போது தி சேஸ், எஃப்ஐஆர், அலைஸ், காதலிக்க நேரமில்லை, ஹேஷ்டேக் லவ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தவறான ஃபேசியல் சிகிச்சை

தவறான ஃபேசியல் சிகிச்சை

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரைஸா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீங்கிய முகத்துடன் போட்டோ ஒன்றை ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு தவறான ஃபேசியல் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது முகம் வீங்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.

ரைஸாவுக்கு நோட்டீஸ்

ரைஸாவுக்கு நோட்டீஸ்

மேலும் சம்பந்தப்பட்ட ஸ்கின் கிளினிக் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த ஸ்கின் கிளினிக் பதிலுக்கு 5 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பழைய ரைஸாவாக

பழைய ரைஸாவாக

இதனால் தொடர்ந்து சில நாட்கள் பெரும் பேசு பொருளாய் இருந்தார் ரைஸா வில்சன். இந்நிலையில் தற்போது வீக்கமெல்லாம் வடிந்து பழைய ரைஸாவாக ஃபார்முக்கு வந்துள்ளார்.

வித்தியாசமான உடைகளில்

தொடர்ந்து க்யூட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ரைஸா வித்தியாசமான உடைகளில் தலை முடியை கோதியப்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். நொடிக்கு நொடி உடைகளை மாற்றி அவர் நடத்தியிருக்கும் அந்த போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் க்யூட் என வர்ணித்துள்ளனர்.

Recommended Video

மரங்களுக்கு நடுவே நடனமாடிய நடிகை Deepika Singh கழுவி ஊற்றிய Netizens
இயற்கை அழகே போதும்

இயற்கை அழகே போதும்

அதேநேரத்தில் பலரும் மூஞ்சி சரி ஆயிடுச்சா? அடுத்து எந்த டாக்டர்கிட்ட என்று கேட்டும் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் செயற்கை அழகு பொருட்கள் பக்கம் போகாதீர்கள் இயற்கை அழகே போதும் என்றும் ரசிகர்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X