காதலனின் மடியில் அமர்ந்து இறுக்கமாக கட்டிப்பிடித்திருக்கும் ரைஸா.. வேற லெவலில் வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை ரைஸா வில்சன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
பிரபல மாடலாக இருந்தவர் ரைஸா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் தனுசு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில நடித்துள்ளார்.

பீச்சில் பிகினியில்..
கடைசியாக வர்மா திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தற்போது தி சேஸ் அலைஸ், காலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் பீச்சில் பிகினியில் நடத்திய போட்டோ ஷூட்டுக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் ரைஸா.

காதலரின் மடியில்
இந்நிலையில் ரைஸாவின் புதிய போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, ரைஸா தனது காதலருடன் படு நெருக்கமாக உள்ளார். ரெஸ்டாரென்டுக்கு தனது காதலருடன் சென்றுள்ள ரைஸா வில்சன், காதலரின் மடியில் ஏறி அமர்ந்து கட்டியணைத்துள்ளார்.

ஹார்ட் சிம்பல்
இந்த போட்டோவை ரைஸா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹார்ட் சிம்பல் போட்டு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார் ரைஸா.

ஹரிஷ் கல்யாணுடன் காதல்
அந்த புகைப்படத்தை பார்க்கும் போதே வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் ரைசா வில்சன் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

காதல் இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தனது காதலருடன் ரைஸா வில்சன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ஹரீஷ் கல்யாணுடன் காதல் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











